கேரள மாநிலம் மால்மோட்டம் நகரைச் சேர்ந்த அனில் என்பவரது மகள் அனகா. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். அனிலுக்கு தனது மகள் அனகா என்றால் கொள்ளை பிரியம். தனது மகளை ஒரு தேவதை போன்று வளர்த்து வந்தார். அனகாவும் தனது தந்தை மீது உயிரையே வைத்திருந்தாள்.
தங்க கொலுசு அணிய வேண்டும் என்ற ஆசை அனகாவுக்கு இருந்துள்ளது. இதனை தனது தந்தையுடம் தெரிவித்து, எப்படியாது தனக்கு தங்க கொலுசு வாங்கிதருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணபற்றாக்குறை காரணமாக அனிலால் தங்க கொலுசினை வாங்கி கொடுக்க முடியவில்லை.
இதற்கிடையில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி பள்ளியை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அனகாவின் மீது டெம்போ வேன் ஒன்று மோதியது.
மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட. அனகா ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அனகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கிறிஸ்துமஸ் தினத்தன்று அனகா உயிரிழந்தார்.
இந்நிலையில் இறுதிச்சடங்கு நடைபெற்ற போது, வேகமாக நகைக் கடைக்கு சென்ற அனில், தனது மகள் ஆசைப்பட்டு கேட்டு தங்க கொலுசினை வாங்கி கொண்டு வந்து உயிரற்று கிடந்த தனது மகளின் காலில் மாட்டிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை உருக வைத்துள்ளது. உயிரற்ற அனகாவின் காலில் மாட்டிவிடப்பட்ட அந்த கொலுசின் ஓசை தந்தை அனிலின் காதில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கும்.
Sunday, 15 January 2017
Whatsapp message
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment