Friday 31 March 2017

Reliance Jio extends last date for Prime Membership subscription; will not charge tariff for first three months


Reliance Jio on Friday made a slew of announcements related to its Prime membership, including no tariff for the first three months under the scheme. To avail the offer, customers will have to first subscribe to the Prime membership by paying Rs 99 and also purchase Jio's Rs 303 and other plans. Following which, they will get the first three months as "complimentary" and their paid tariff plan will begin from July.
"Every Jio Prime member - when they make their first paid recharge prior to 15th April using Jio's Rs 303 plan (or any higher value plan) - will get services for the initial 3 months on a complimentary basis. Your paid tariff plan will be applied only in July, after the expiry of the complimentary service," Reliance Industries Chairman Mukesh Ambani said.
Jio Summer Surprise 
While thanking customers who have purchased the Prime membership, Ambani termed the new offer as Jio Summer Surprise. "The Jio Summer Surprise is the first of many surprises for JIO PRIME members," he said.
Ambani also said that over 72 million people had subscribed to Reliance Jio in a record period. 
"In just one month over 72 million Jio customers have signed up for Jio Prime membership," Ambani said.
"Over the past few days, we have been deluged by millions of customers queuing up to purchase Jio's popular Rs 303 and other tariff plans. This nationwide trend indicates that very many customers are still in the process of purchasing JIO PRIME and their first paid tariff plan. I am committed to 'WALKING THE EXTRA MILE' for my Jio Family members," Mukesh Ambani said in statement.
On Network Congestion
Ambani also made a reference of the network issues and promised an improvement in service quality in the days ahead. 
"We are acutely aware that we have small pockets of congestion on our network. With our investment in network expansion, you will see a dramatic improvement in service quality in the coming weeks," Ambani said

Sunday 26 March 2017

Whatsapp message

😎பிறப்பு        "ஒரு முறை"
    இறப்பு        "ஒரு முறை"
    காதல்         "ஒரு முறை"
    வாழ்க்கை  "ஒரு முறை"
                
           ஆனால்

😎சாப்பாடு மட்டும் தினம் 3 முறை
அதனால் கூச்சப்படாமல்  சாப்பிட்டுங்க...
ஆரோக்கியமா இருங்க

💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

😎விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல...

😎நம்மால் முடியும் வரை தூங்வதே தூக்கம்...
அதனால நல்ல தூங்குங்க

💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

😎யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்...

😎ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம்...

😎அதற்கு பதில் அவர்கள் எலும்புகளை உடையுங்கள் அது 206 உள்ளது...                    
என்ன நா சொல்றது

💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

😎இவன் கூட வாழ்ந்தா தான் சந்தோசமா இருப்போம்னு நினைக்கிறது...
                                                " பெண்கள் குணம் "

😎வாழ்க்கை துணையா யார் வந்தாலும் அவளை சந்தோசமா வச்சுகிறது...
             
" ஆண்களின் குணம் "

💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

😎திருமணங்களில் திருமண ஜோடிகளைக் கவனிப்பவர்களை விட
தனக்கான ஜோடியினை தேடுபவர்கள்தான் அதிகம்...

💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

😎லவ் பண்றவன் பீர் அடிப்பான்...

😎லவ் failure ஆனவன் hot அடிப்பான்...
                        
          ஆனால்

😎ஒன் சைடா லவ் பண்றவன் மட்டும் பக்கத்துல இருக்குற நண்பன சாகடிப்பான்...

💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

😎லவ்வு " சோறு " கூட போடாது...

         ஆனால்

😎நட்பு " மட்டன் " பிரியாணியே "போடும்...

💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

😎மறந்தாலும் மறக்க முடியாதது
காதல்...

          ஆனால்

😎இறந்தாலும் இழக்க முடியாதது
நட்பு மட்டும்தான்...

💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘


காலமெல்லாம் இனைந்து வாழும் புருசனும் பொஞ்சாதியும்... கொஞ்சம் அனுசரித்து வாழுங்கள்.!!



ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்...

கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர்,...

அப்பெண்ணை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே...!!!

ஏன் உன் கணவனைகடிந்து கொண்டாய் என தெரிந்து கொள்ளலாமா..?" என வினவினாள்......

"ஒன்னுமில்லை ஆண்டி, சும்மாதான். இது என் கணவரது தங்கையின் திருமணம்....

நானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்....

வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை....

இதிலே என்னைய வேறு கூப்பிடுறார் !
.
பெண் என்றால் அடிமையா என்ன..?

கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு.... ?

எனக்கே அசதியா இருக்கு.....

இந்த ஆம்பளைங்களே இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்.

சும்மா கடுப்பேத்திகிட்டு"....

முதியவள் சிறு புன்னகையோடு,

"மகளே" முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன்.....!!!

ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி.
எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு....

ரெண்டு பேருமே விவசாயமே..தொழில்.   .
வயதும் 65ஐ கடந்துவிட்டேன்..!!!

காடு தோட்டமெல்லாம் இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டு...

ஒரே மகளான தெய்வநாயகிக்கும் கொஞ்சம் காசு பணம் நகைன்னு கொடுத்துவிட்டு....

பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்....

எங்களோட 2 பிள்ளைங்களும்,ஒரு மகளும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே,...

நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம்...

என் கணவனுக்கு துரதிஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி...

தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்....!

இப்ப அவங்க இல்லை,....!

நான் ரொம்ப தனிமையை உணர்கிறேன்...

என் பகல்கள் ரொம்ப நீளமாயிடுச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாயிடுச்சு..!!

அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு....!

அவங்க சாப்பிட்டு முடிக்காத மீதமுள்ள மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது....!

அவங்க handphone நம்பர் இருக்கு,! ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க,...!

whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க...!

முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்...!

இப்ப நான்
அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... !

சமையலறைக்குத் தனியா போறேன், ! சமையல்ன்னு பேர்ல எதையோ பண்றேன், !

வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை.!..

கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...!

விழியோரம் நீர் தேங்க..,

அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும் ..,!

அதிகமாக போற்றணும்....!!!

கணவனின் வெற்றியோ தோல்வியோ,!

பெருமையோ அவமானமோ...!!!.

லாபமோ...
நட்டமோ...

மனைவிக்கு அனைத்திலும்..
சம பங்கு உண்டு...!

தன் மனைவி தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானமும் தலை குனிவும்....

வேறெந்த அவமானத்தையும் விட அவனை அதிகம் காயப்படுத்தும்....!

மிகவு‌ம் வேதனை படுத்தும்.!

எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்..

பஸ் இல் ஏறும் போது ,
விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து....

இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்.!!!

பிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன்...!.

அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார்.!
பல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது.....

பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக...

பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்....!

இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன்.....!

எனக்காக எல்லாத்தையும் தயார் செய்த நீங்க முன்னாடி போயிட்டிங்களே...?"

இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.!

சரி மகளே,! நான் வர்ரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் மனைவி்..... !.

என்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்.....!!!!!!


Health tips

கடைகளில் வாங்கி வரும் பழங்களை
"எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று நிமிடம் வைத்து அலசினால்
பழங்களின் மீது தெளிக்கப்பட்ட அனைத்து விதமான ரசாயனயத்தின் வீரியமும் சில குறிப்பிட்ட ரசாயனங்கள் முற்றிலுமாக நீங்கிவிடும்..!!
கண்டிப்பாக பகிருங்கள்
மக்களின் நலனில்
தி இந்தியன் லைட் ஹவுஸ் சமூக சேவை அமைப்பு


கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா?

💐💐

ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர்.

இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர்.

மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர் இருவரும் சூரியனை வணங்கினார்கள்

அப்பொழுது சூரிய பகவான் அசிரியாக தோன்றி

"வேத குருவே! உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன்

இன்று சூரியனான நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள் எ கூறி மறைந்தான்

குருவும் சூரியனை வாங்கிவிட்டு சீடனை கவலையோடு பார்த்தார்

இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே உள்ள கோவிலின் இறைவனை வணங்கினர்

பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர்.

சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர சீடன் தூங்கினானே தவிர குரு தூங்கவில்லை.

சீடனின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று நினைத்து விழித்து இருந்தார்.

அப்பொழுது ஒரு ராஜநாகம் படம்  எடுத்த படி சீடனின் அருகே அவனை கொல்ல வந்தது.

இதை பார்த்து பதை பதைத்த குரு ராஜநாகமே நில் என்று ஆணையிட்டார். ராஜநாகமும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது.

குரு ராஜநாகத்தைப் பார்த்து, "நீ என் சீடனின் உயிரை எடுக்கவே வந்துள்ளதை நான் அறிவேன். குரு பக்தி மிகுந்த சீடனை காப்பாற்றுவது ஒரு குருவின் கடமை. அதனால் என் சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்கமாட்டேன்", என்று தடுத்தார்.

இப்பொழுது ராஜநாகம் பேசியது.

"வேத குருவே உங்கள் சீடனின் கழுத்தில் என் நாவை வைத்து ரத்தத்தை உறிஞ்சு எடுக்க வேண்டும் என்பது எனக்கு காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே   என் கடமையை செய்ய விடாமல் இப்படி தடுத்து என்னை நிறுத்தலாமா?" என்று முறை இட்டது.

உடனே குரு "அப்படி என்றால் என் சீடனின் ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே உனக்கு காலன் இட்ட கட்டளை

சரி, சற்று பொறு! நானே அவனது ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். அதை உறிஞ்சியதும் நீ உன் கடமையை செய்து விட்ட பலனை பெறுவாய்." என்று கூறி

ஒரு சிறு கத்தியை எடுத்த குரு அதை சீடனின் கழுத்தில் வைத்து ரத்தம் வரும் அளவு ஆழம் வைத்து கத்தியை கீறினர்.

தன் கழுத்தில் கூர்மையாய் எதோ கீறுவதை உணர்ந்த சீடன் கண் விழித்து பார்த்தான். குரு தன் கழுத்தில் கத்தியை வைத்து கீறுவதை உணர்ந்து பின் கண்மூடி சிறிதும் அசையாமல் படுத்த படியே இருந்தான்

சீடனின் பல துளி ரத்தத்தை எடுத்த குரு அதை ராஜநாகத்துக்கு ஊட்டிவிட்டார்

ராஜநாகமும் குருவின் சாபத்துக்கு நாம் ஆளாகாமல் நம் கடமை நிறைவேறியதே என்ற மகிழ்வோடு ரத்தத்தை உறிஞ்சி விட்டு வந்த வழியே சென்றது

குருவும் சீடனின் உயிரை காப்பாற்றிய நிம்மதியோடு அவனது கழுத்தில் முன்னமே தான் எடுத்து வைத்திருந்த பச்சிலை சாற்றை பிழிந்து சீடனின் கழுத்து பகுதியில் பற்று போட்டு விட்டு நிம்மதியோடு உறங்க சென்றார

சிறிது நேரம் இருவரும் நன்றாக களைப்பு தீர உறங்கிய பின் எழுந்து அமர்ந்தனர்.

அப்பொழுது சீடன் தன் கழுத்தில் பற்று இருப்பதை தொட்டு பார்த்து விட்டு எதுவும் குருவிடம் கேட்காமல்

"குருவே நாம் நடை பயணத்தை தொடரலாமா?" என்று கேட்டான்

குரு புன்னகையுடன், "சீடனே! நீ சற்று முன்    உறங்கும்போது  நான் உன் கழுத்தில் கத்தி வைத்த போது நீ என்ன நினைத்தாய்? உனக்கு பயம் எதுவும் உண்டாகவில்லையா?" என்று புன்னகையுடன் கேட்டார்

சீடன், "குருவே என் கழுத்தில் எதோ ஊறுவதை உணர்ந்தேன். விழித்தும் பார்த்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால் என் குருநாதராகிய தாங்கள் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் நான் நிம்மதியாக உறங்கினேன்

இப்பொழுது எழுந்ததும் என் கழுத்தில் உள்ள மூலிகை பற்றை பார்த்தேன் என் குருநாதராகிய உங்களுக்கு என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால், எனக்கு அதிலும் எந்த வித கவலையும் இல்லை." என்று கூறி பணிந்து நின்றான்.

குருவும் சீடனை ஆற தழுவி எழுந்து அவனோடு நடக்கலானார்.

நண்பர்களே! நமக்கு விதித்த படி நடக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் இறைவனே பொறுப்பு என்று அவனை சரணடைந்து விட்டால், நமக்கு நடக்க இருக்கும் தீமையும் இறைவன் அருளால் நன்மையாக நடக்கும்.

இதில் சீடன் தான் நாம்

குரு தான் நம் கடவுள்

ராஜநாகம் தான் நம் விதி

ஞானகுரு இறைவன் சொல்லும் வார்த்தைகளை முழு நம்பிக்கையுடன் ஏற்று..

நம் வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டால், நம் வாழ்வில் எப்போதும் நல்லதே நடக்கும்.


செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்

ரெண்டு இட்லி!

இரக்க குண பெண்மணி ஒருத்தி 
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.

அவன் முனகியது, இதுதான்:
" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உன்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

*செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்*.

*ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்*.

*வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.


Thursday 23 March 2017

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.

யார் ஏழை  ❓❓❓

🔰ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗

🔰சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..❗

♻இதில் யார்_பணக்காரர்...❓❗

🔰3'ஸ்டார் 🏬ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,

🏬ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் 🍼வேண்டும் என்று கேட்கிறார்,

அதற்கு அந்த மேலாளர் 🍼பாலுக்கு நீங்கள் தணியாக 💶பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் 💶பணத்தை செலுத்தி 🍼பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...❗

🔰ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு 🏬ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் 🍼பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு 🍼பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,

டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் 💶காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...❗

பணம்💶 உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......❗❗
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....❗❗

இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....
நம் 👀கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....❗❗

தொடக்கம் நாமாக இருப்போமே...❗❗
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது ⚽கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.


Whatsapp message

#சோக_காதல், 😢😢

நான் ஒரு பெண்ணிடம் என்காதலை தெரிவித்தேன்..!
அவள் முதலில் எனக்கு தந்தது ஒரு சவால்..!

ஒருநாள் முழுவதும் அவளை பார்க்காமல் பேசாமல் இருக்கவேண்டும்..!
என்று...!

அப்படி உன்னால் முடிந்தால்?
உன்னை காதலிக்கிறேன் என்று கூறினாள்..!

அவள் ஒரு புற்று நோய்நோயாளி என்பது அவளுக்கு தெரியும்...

இந்த பூமியில் 24 மணிநேரம் மட்டும் அவளால் உயிர்வாழ முடியும்..!
ஒருநாள் முழுவதும் முடிந்தது !

அவன் அவளை பார்ப்பதற்காக சிவப்பு ரோஜாவை கையில் ஏந்தி கொண்டு ஓடி வந்தான்..!

ஆனால்..!
அவன் அங்கே கண்டது,
சுவாசம் இல்லாமல் மரண படுக்கையில் கிடந்த அவள் கையில் ஒரு கடிதமும்..!

கடிதத்தில் நீ ஜெயித்துவிட்டாய்...
ஒரு நாள் முழுவதும் உன்னால் என்னிடம் பேசாமலும், பார்க்காமலும்
இருக்க உன்னால் முடியும் !

இனி வரும்காலங்களிலும் நீ இதே போல் வாழ்ந்து விடு..!!! என்று...!

வாழ்கிறேன்...
இன்னும் அவளுக்காக.....

Miss u 😓


Whatsapp message

இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. அதில் ஒரு 20  வயது மதிக்கத்தக்க ஒருவன். துறுதுறுவென்று எல்லாரிடமும், பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டுமிருக்கிறான். 

இங்கிலாந்து கம்பெனியின் நிர்வாகிக்கு அந்தச் சிறுவனைக் கண்டதுமே ஏனோ பிடிக்கவில்லை. இரண்டொரு நாளில் இன்ஸ்டலேஷன் பணிகள் துவங்க இருக்க, ஜப்பான் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்.

“ஏப்பா.. அவ்ளோ துட்டுப் போட்டு வாங்கிருக்கோம். சர்வீஸ் டீம்ல சின்னப்பையனைலாம் சேர்த்தி அனுப்பிருக்கீங்க? என்ன டூர் வந்திருக்காங்களா? ஏர்போர்ட்ல இருந்து ரூமுக்கு அனுப்ச்சாச்சு. நாளைன்னைக்கு இன்ஸ்டால் பண்றப்ப அந்தப் பையன் மிஷின்ல கைய வைக்கக்கூடாது ஆமா. அதென்ன சின்னப்புள்ளைக சமாச்சாரமா?” - இதுதான் அவர் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம்.

உடனடியாக பதில் அஞ்சல் வந்தது. “மன்னிக்க வேண்டும். தவறுதான். நாங்கள், அந்தச் சிறுவனுக்கு பதில் கொஞ்சம் சீனியரை டீமுக்கு அனுப்புகிறோம். அந்தச் சிறுவன் அங்கே இருப்பான். ஆனால் கருவியைக் கையாள மாட்டான்” என்று பதில் வருகிறது. சொன்னபடியே கொஞ்சம் வயதில் மூத்தவர்  வருகிறார். குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்தச் சிறுவனும் அவர்களுடன்தான் இருக்கிறான். ஆனால் அந்த மிஷின் வேலை செய்யும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறான். இந்தக் குழுவினார் டீ ப்ரேக், லஞ்ச் ப்ரேக்கெல்லாம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்து, இரண்டு நாட்களில் இயந்திரத்தை நிறுவிவிடுகிறார்கள். வேலை வெற்றிகரமாக முடிந்துவிடுகிறது.

வழியனுப்பும்போது, இந்த இங்கிலாந்து கம்பெனி நிர்வாகிக்கு சின்னதாக ஒரு குற்ற உணர்வு. என்ன இருந்தாலும் அவ்வளவு கடுமையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கக்கூடாது என்று தோன்றுகிறது. அந்தச் சிறுவன் அவன் பாட்டுக்கு சிரித்த முகத்துடனேயே வளைய வருகிறான். அவனிடம் இதைச் சொல்லிவிட்டால் மனது லேசாகிவிடும் என்று உணர்கிறார். குழுவினர் எல்லாரும் இருக்க, சொல்கிறார்:

“ஸாரி.. ஆக்சுவலி பலகோடி ரூபாய் ப்ராஜக்ட். இன்ஸ்டால் பண்றப்ப எதும் சிக்கல் வந்தா அப்பறம், பணம் நேரம்னு பெரிய நஷ்டமாகிடும். அதான் கொஞ்சம் சீனியர் வேணும்னு கேட்டேன். மத்தபடி ஐ லைக் த பாய். துறுதுறுன்னு இருக்கான். ஆனா இந்த டீம்ல இப்படி ஒரு சின்னப்பையன் வந்தது எனக்கு சரின்னு படலை. அதான்..” என்று பாலிஷாகச் சொல்கிறார். 

அந்தச் சிறுவன் அதே புன்னகையுடனே இருக்க, புதிதாக வந்தவர் சொல்கிறார். “இட்ஸ் ஓகே சார். நாங்க வாடிக்கையாளர் கருத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம். நீங்க சொன்னதுமே என்னை அனுப்பி வெச்சாங்க. இப்ப மிஷின் நல்லபடியா இன்ஸ்டால் செஞ்சு, ஓடிட்டிருக்கு. ஆனா ஒரு விஷயம்..” தயங்குகிறார்.

”பரவால்ல.. எதாருந்தாலும் சொல்லுங்க”

“நான் அந்தக் கம்பெனில அக்கவுண்ட்ஸ்ல வொர்க் பண்ற ஆளுதான். எனக்கு இந்த மிஷின் பத்தி ஏபிசிடிகூட தெரியாது”

நிர்வாகி அதிர்ச்சியாகிறார். “அப்பறம் இன்ஸ்டலேஷனப்ப வேலை செஞ்சுட்டிருந்தீங்க?”

“இந்தப் பையன்கிட்ட போய்ப் போய்க் கேட்டு அவன் சொல்றத மட்டும் பண்ணினேன் அவ்ளதான்”

“அந்தப் பையன் எப்படி மிஷின் பக்கமே வராம, உங்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குடுத்திருக்கமுடியும்?”

“முடியும். ஏன்னா, இந்த மிஷினைக் கண்டுபிடிச்சதே அவன்தான்”

** ** **