அவர்கள் அவரோடு தங்கினார்கள்

*“அவர்கள் அவரோடு தங்கினார்கள்”*

*நிகழ்வு*         

           பதினேழாம் நூற்றாண்டில், பிரான்ஸ் நாட்டில் தோன்றிய மிகச்சிறந்த மெய்யியலார் பிளேஸ் பாஸ்கல் என்பவர். இறைநம்பிக்கையில்லாமல் வாழ்ந்து வந்த இவர் 1662 ஆம் ஆண்டு இறந்தார். இவர் இறந்தபொழுது இவருடைய உதவியாளர் இவருடைய சட்டைப் பையிலிருந்து ஒரு காகித்ததை எடுத்தார். அந்தக் காகிதத்தின் மேற்பகுதியில் சிலுவை அடையாளம் வரையப்பட்டிருந்தது. அதற்குக் கீழ் 1654 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் நாள், இரவு பத்து முப்பது மணியிலிருந்து பன்னிரண்டு முப்பது மணிவரை நடந்த ஒரு முக்கியமான நிகழ்வு குறிப்பிடப்பட்டிருந்தது.  அதுதான் அவருக்கு ஏற்பட்ட இறையனுபவம்.

இறைவன்மீது நம்பிக்கையில்லாமல் வாழ்ந்து வந்த இவரை, இவருக்கு ஏற்பட்ட இறையனுபவம் முற்றிலுமாக மாற்றியது. இதற்குப் பின்பு இவர் இறைவன்மீது ஆழமான நம்பிக்கைகொண்டு வாழத் தொடங்கினார்; ஆனால், இவர் இறைவன்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது இவர் இறந்தபின்பு இவருடைய சட்டைப்பையில் இருந்த காகிதத்தின் மூலமே உலகுக்குத் தெரிந்தது.

பிளேஸ் பாஸ்காலுக்கு ஏற்பட்ட இந்த இறையனுபவம் அவருடைய வாழ்வை முற்றிலுமாக மாற்றியது என்றால் அது மிகையில்லை. நற்செய்தியில் அந்திரேயாவும் அவரோடு இருந்த மற்ற  சீடரும் இறையனுபவம் பெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அந்த இரண்டு சீடர்களுக்கும் ஏற்பட்ட இறையனுபவம் அவர்களுடைய வாழ்வை எப்படி மாற்றியது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

*இயேசுவைச் சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவான்*

நற்செய்தியில், திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர் இருவரோடு நின்றுகொண்டிருக்கின்றார். இருந்த இரண்டு சீடர்களில் ஒருவர் அந்திரேயா. மற்றவர் யோவானாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. திருமுழுக்கு யோவான் தன்னுடைய இரு சீடர்களுடன் நின்றுகொண்டிருக்கையில்தான் இயேசு அந்த வழியாக நடந்து செல்கின்றார். உடனே திருமுழுக்கு யோவான் இயேசுவைச் சுட்டிக்காட்டி, தன் சீடர்கள் இருவரிடம், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்கின்றார். முன்னதாக, யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குக் கொடுக்கும்பொழுது இயேசுவை ‘இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி’ (யோவா 1:29) என்று (உலகுக்குச்) சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவான், இங்கு தம் இரு சீடர்களுக்கும் சுட்டிக்காட்டிகின்றார்.

இங்கு நாம் இரண்டு உண்மைகளை நம்முடைய மனத்தில் பதிய வைக்கவேண்டும். ஒன்று, திருமுழுக்கு யோவான் இயேசுவை, இவ்வுலகிற்கும் தம் இரு சீடர்களுக்கும் சுட்டிக்காட்டினார். இந்தத் திருமுழுக்கு யோவானைப் போன்று நாமும் இயேசுவை உலகிற்குச் சுட்டிக்காட்டவேண்டும். இரண்டு, திருமுழுக்கு யோவான் தன்னுடைய பணி நிறைவுபெற்றவும் (ஆண்டவருக்காக மக்களைத் தயார்செய்தது) அந்தப் பணியினை ஆண்டவரிடம் ஒப்படைத்தார். நாமும் நம்முடைய பணி நிறைவுபெற்றதும், அதனை நமக்குப் பின்வருபவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவருக்கு வழிவிடுவதே சாலச் சிறந்தது.

*இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்ற இரண்டு சீடர்கள்*

திருமுழுக்கு யோவான் தம் இரு சீடர்கள் இருவரிடம் இயேசுவைச் சுட்டிக்காட்டியதும், அவர்கள் இருவரும் இயேசுவைப் பின்தொடருகின்றார்கள்; அவரோடு தங்குகின்றார்கள். இருவரும் இயேசுவோடு தங்கிய அனுபவம் அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் அவர்கள் இருவரும் இயேசுவோடு தங்குவதற்கு முன்பாக இயேசுவை வெறும் ‘இரபி’யாகத் தான் நினைத்திருந்தார்கள்; ஆனால் அவர்கள் இருவரும் இயேசுவோடு தங்கியபின்பு,  ‘மெசியா’வாகப் பார்க்கத் தொடங்குகின்றார்கள். இதுதான் அவர்கள் இருவரும் இயேசுவோடு தங்கியதால் பெற்ற நன்மை அல்லது அனுபவமாகும். நற்செய்தியில் வருகின்ற இந்த இரண்டு சீடர்களைப் போன்று நாம் ஒவ்வொருவரும் இயேசுவோடு தங்கி அல்லது அவரோடு ஒன்றித்திருந்து இறையனுபவம் பெறுவது மிகவும் இன்றியமையாததாகும்.

*இறையனுபம் பெற்ற அந்திரேயா, பேதுருவை இயேசுவிடம் அழைத்து வரல்*

ஆண்டவர் இயேசுவோடு தங்கி, இறையனுபவம் பெற்ற அந்திரேயா ‘சும்மா’ இருந்துவிடவில்லை; தன்னுடைய சகோதரர் பேதுருவிடம் சென்று, “மெசியாவைக் கண்டோம்” என்று அறிவிக்கின்றார். மட்டுமல்லாமல், அவரை இயேசுவிடம் அழைத்துக்கொண்டு வருகின்றார். அந்திரேயா செய்த இப்பணி மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு பணி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், அவர், ‘தாம் இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுபோல், தாம் பெற்ற இறையனுபத்தை பேதுருவிடம் எடுத்துரைத்து, அவரை இயேசுவிடம் அழைத்துவிடுகின்றார். ஒருவேளை அந்திரேயா மட்டும் பேதுருவிடம் இயேசுவைப் பற்றி எடுத்துரைக்காவிட்டால், திருஅவைக்கு பேதுருவைப் போன்று ஒரு தலைவர் கிடைத்திருக்கமாட்டார்.  நாமும் அந்திரேயாவைப் போன்று, பெற்ற இறையனுபவத்தைப்  பிறரோடு பகிர்ந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது.

*சிந்தனை*

          ‘ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்’ (திபா 34:8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், இயேசுவைப் பற்றிய அனுபவம் பெறுவோம். அந்த அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் 

.

No comments:

Post a Comment