Monday 9 December 2019

#இப்படித்தான் வாழ்க்கை இருக்க வேண்டும்

#. ஒருமுறை முல்லா நஸ்ருதீன் தன்னுடைய கழுதை மீது அமர்ந்து படுவேகமாகப் போய்க் கொண்டிருந்தார். கடைவீதி வழியே போகும்போது அங்கே இருந்தவர்கள், "எங்கே இவ்வளவு வேகமாகப் போகிறீர்கள்?" என்று கேட்க, அவர் " எங்கே போகிறேன்னு எனக்கே தெரியாது, என் கழுதையையே கேளுங்க அது எங்க போகுதுன்னு?" என்று கூறிக்கொண்டே பறந்து விட்டார். மாலையில் அவர் மெதுவாக திரும்பி வருகையில், ' எங்கேதான் அப்படி போய் வந்தீர்கள்?' என்று கேட்க, அவர் சொன்னார், " நான் எங்காவது போகனும்னா இந்தக் கழுதை முரண்டுபிடிக்குது. இதோட போராடிப் பார்த்து அது வியர்த்தம்னு தெரிஞ்சுகிட்டேன். அது என் வழிக்கு வர்றதில்லை. அதனால அதோட வழிக்கு நான் போயிட்டேன். அது அதனோட இஷ்டத்துக்கு எங்கெங்க போகுதே அங்கெல்லாம் நானும் போயி, எனக்கு உண்டான வேலை அங்கிருந்தா அதெல்லாம் முடிச்சுக்கிறேன்". அதனால் தான் எல்லா ஞானிகளும் கழுதையை அதன் போக்கிலே போக விட்டுவிடுகிறார்கள். எதிர்பார்க்கும்போதோ, ஆசைப்படும்போதோ அது நடைபெறவில்லை என்றால் ஏமாற்றமும் பிரச்சினைகளும் தோன்றுகின்றன. என்ன கிடைத்தாலும் சரியே என்று ஏற்றுக் கொள்ளும் போது வாழ்க்கை ராஜநடை போடுகிறது. என்ன கிடைக்கிறதோ அதை விரும்பிவிடு. அதை ஏற்றுக் கொள். அதை அனுபவி. அதைக் கொண்டாடு. அப்போது வாழ்க்கை சந்தோஷமாக நகர்கிறது. நம்மிடம் இருப்பதையே நாம் விரும்ப முடியும் என்றால் எந்தப் பிரச்சனையும் இல்லை. எந்தத் தொல்லையும் இல்லை. எந்தக் கவலையும் வருவதில்லை. எல்லாமே வெகு எளிதாய்ப் போய்விடும் ! *#ஓஷோ_முல்லா_ஜோக்ஸ்*

No comments:

Post a Comment