Thursday 20 September 2018

WhatsApp message

*வார்த்தை ஒன்றுதான்*

மருத்துவர்
சொன்னால்
மகிழ்ச்சி

ரேசன் கடைகாரர்
சொன்னால்
வருத்தம்


*" சர்க்கரை இல்லை"*

😳 😇 🤔

****************************
*வார்த்தை ஒன்றுதான்*

கணவர்
சொன்னால்
மகிழ்ச்சி

மகன்
சொன்னால்
வருத்தம்


*" அரியர்ஸ் வந்து இருக்கிறது"*

😳 😇 🤔

****************************
*வார்த்தை ஒன்றுதான்*

மனைவி
சொன்னால் கணவனுக்கு
மகிழ்ச்சி

கணவன்
சொன்னால் மனைவிக்கு
வருத்தம்


*"ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா"*

😍😂🤣🤩😆😆😆


Monday 10 September 2018

நாம ஒன்னு நினைச்சா....?????* *தெய்வம்.ஒன்னு நினைக்குது...!!!!

*நாம ஒன்னு நினைச்சா....?????*
*தெய்வம்.ஒன்னு நினைக்குது...!!!!*
 
கோவில் கூட்டத்தில் வரிசையில்..!!

உண்டியல் அருகே வந்தவுடன்..
ஒரு *பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன்,*
அதைப் பலர் பார்க்கும் படி *பெருமிதமாக,*

ஆனால்....                   *அது சற்று கிழிந்து , வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த நோட்டை.....*

சரி.... விடு....
*கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ....????*

வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று ...

*வரிசை நகர... நகர.... சில வினாடிகளில் பின்னாளில் இருந்து எனது தோளை தொட்டு ஒருவர்.... 2 000 ஆயிரம் ரூபாய் நோட்டை.. என்னிடம்.. கொடுத்தார்.....*

*அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு,*

*சே.......     எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்..*

பின் *கடவுளை  வணங்கி விட்டு , வெளியே வந்தால்...*

அவரும் அருகே நடக்க...  அவரிடம்..

*சார் நீங்கள் உண்மையிலேயே.... கிரேட் என்றேன்..*

அவர் புரியாமல் *எதுக்கு என்றார்...*

*கடவுளின் உண்டியலில் ரூ 2 000 போடுகிறீர்களே.... எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன் நான்..*

*நானா..???? இல்லங்க.. சார்.. ???*

சார் நீங்க *காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து.... அந்த 2000 ரூபாய் நோட்டு விழுந்தது..,*

*அதைத்தான் நான் எடுத்து உங்களுக்கு  கொடுத்தேன்..*

*அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான்.... உன்னதமான கிரேட் மேன்..  என்றார்....*

*டமார்னு ஒரு சத்தம்.... (வேற என்ன நெஞ்சு தான்)

மற்றவரை ஏமாற்ற நினைத்தால்...
நாம் தான் ஏமாறுவோம்..

அது கடவுளாக இருந்தாலும் சரி...


Sunday 9 September 2018

WhatsApp message

👤✍

1×9=7
2×9=18
3×9=27
4×9=36
5×9=45
6×9=54
7×9=63
8×9=72
9×9=81
10×9=90

மேலே உள்ள சமன்பாடு ஆசிரியை ஒருவரால் கரும்பலகையில் எழுதப்பட்டது. இந்த சமன்பாடு எழுத ஆரம்பித்தது முதல் வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்து கொண்டிருந்தது. காரணம் முதலாவது சமன்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது. மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.

சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்...

நான் முதல் சமன்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன். இவ்வாறு எழுதியதற்கு ஒரு காரணமுண்டு. இதன் மூலம் உங்களுக்கொரு படிப்பினையைக் கற்றுத் தருவதே அதன் நோக்கம்.

இந்த உலகம் உங்களை எவ்வாறு மதிப்பிடுகின்றது என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள்.

நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக  எழுதியிருக்கின்றேன். அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்ட முன்வரவில்லை. ஆனால் நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விஷயத்தைக் காரணங்காட்டி அனைவரும் சிரித்து கேலி செய்து விட்டீர்கள்.

நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும் இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை. ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒருமித்து நின்று மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்...

இவைகளைக்கண்டு ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள். உங்களைப் பார்த்து சிரித்தவர்கள்,  உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்.