ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்...
கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர்,...
அப்பெண்ணை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே...!!!
ஏன் உன் கணவனைகடிந்து கொண்டாய் என தெரிந்து கொள்ளலாமா..?" என வினவினாள்......
"ஒன்னுமில்லை ஆண்டி, சும்மாதான். இது என் கணவரது தங்கையின் திருமணம்....
நானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்....
வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை....
இதிலே என்னைய வேறு கூப்பிடுறார் !
.
பெண் என்றால் அடிமையா என்ன..?
கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு.... ?
எனக்கே அசதியா இருக்கு.....
இந்த ஆம்பளைங்களே இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்.
சும்மா கடுப்பேத்திகிட்டு"....
முதியவள் சிறு புன்னகையோடு,
"மகளே" முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன்.....!!!
ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி.
எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு....
ரெண்டு பேருமே விவசாயமே..தொழில். .
வயதும் 65ஐ கடந்துவிட்டேன்..!!!
காடு தோட்டமெல்லாம் இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டு...
ஒரே மகளான தெய்வநாயகிக்கும் கொஞ்சம் காசு பணம் நகைன்னு கொடுத்துவிட்டு....
பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்....
எங்களோட 2 பிள்ளைங்களும்,ஒரு மகளும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே,...
நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம்...
என் கணவனுக்கு துரதிஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி...
தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்....!
இப்ப அவங்க இல்லை,....!
நான் ரொம்ப தனிமையை உணர்கிறேன்...
என் பகல்கள் ரொம்ப நீளமாயிடுச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாயிடுச்சு..!!
அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு....!
அவங்க சாப்பிட்டு முடிக்காத மீதமுள்ள மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது....!
அவங்க handphone நம்பர் இருக்கு,! ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க,...!
whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க...!
முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்...!
இப்ப நான்
அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... !
சமையலறைக்குத் தனியா போறேன், ! சமையல்ன்னு பேர்ல எதையோ பண்றேன், !
வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை.!..
கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...!
விழியோரம் நீர் தேங்க..,
அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும் ..,!
அதிகமாக போற்றணும்....!!!
கணவனின் வெற்றியோ தோல்வியோ,!
பெருமையோ அவமானமோ...!!!.
லாபமோ...
நட்டமோ...
மனைவிக்கு அனைத்திலும்..
சம பங்கு உண்டு...!
தன் மனைவி தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானமும் தலை குனிவும்....
வேறெந்த அவமானத்தையும் விட அவனை அதிகம் காயப்படுத்தும்....!
மிகவும் வேதனை படுத்தும்.!
எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்..
பஸ் இல் ஏறும் போது ,
விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து....
இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்.!!!
பிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன்...!.
அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார்.!
பல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது.....
பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக...
பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்....!
இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன்.....!
எனக்காக எல்லாத்தையும் தயார் செய்த நீங்க முன்னாடி போயிட்டிங்களே...?"
இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.!
சரி மகளே,! நான் வர்ரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் மனைவி்..... !.
என்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்.....!!!!!!
Sunday, 26 March 2017
காலமெல்லாம் இனைந்து வாழும் புருசனும் பொஞ்சாதியும்... கொஞ்சம் அனுசரித்து வாழுங்கள்.!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment