Sunday, 27 November 2016

இப்படிக்கு 1000 ரூபாய், 500 ரூபாய்

பெட்டிகளில்  அடைத்தென்னை....
கருப்பனாய்  மாற்றியும்......

தேர்தலை  மாற்றினேன் !
பல  தேர்வுகளை  மாற்றினேன்  !

காட்சிகளை  மாற்றினேன் !
பலர்  கனவுகளை  மாற்றினேன் !

நீதிகளை  மாற்றினேன் !
நிதிகளையும்  மாற்றினேன் !

கண்டெய்னரில் பிடித்தாலும்
கர்வத்தோடு வெளிவந்தேன் !

அய்யகோ... நானின்று
கடலை மடிக்கும் வெற்று காகிதமனேன் !

ஒத்த  ரூபாய்  சிரிக்கிறது !   பத்து ரூபாய் சிரிக்கிறது !
அத்தனைக்கும் மதிப்புண்டு !  நான் மட்டும் நாதியிழந்தேன் !

நான் போட்ட ஆட்டத்துக்கு ..... நாதியத்து நிற்கின்றேன்  !


மானுடனே   கேள் !   
பத்தும்  செய்த  எனக்கே  இக்கெதியெனில்

உன் நிலையை யோசித்திடு ........

ஆட்டத்தை நிறுத்திவிடு !!
தப்பான       ஆட்டத்தை       நிறுத்திவிடு    !!

லஞ்சம் தவிர்த்து  !    நெஞ்சம் நிமிர்த்து !

இப்படிக்கு

1000 ரூபாய், 500 ரூபாய்.
😊😇😀😘😃🙏


No comments:

Post a Comment