Friday 24 November 2017

Whatsapp message

ஒரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன.

எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்தினான்.

அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் கொல்ல முடிவு செய்து அந்த 🐕🐕🐕🐕🐕 நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.

மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார்.

"பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை... தண்டனையை நிறைவேற்றும் முன்  எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள் அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!"

சற்றே யோசித்த அரசன், 'பத்து நாட்கள்தானே... சரி'யென்று அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.

அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார்.

முதலில் அவற்றுக்கு உணவு கொடுத்து, பிறகு அவற்றுடன் விளையாடி, குளிப்பாட்டி நாய்களுடனேயே சந்தோசமாய் இருக்க ஆரம்பித்தார்.

பத்து நாட்கள் முடிந்தது.

அரசன் சொன்னபடி தனது தண்டனையை நிறைவேற்றத் தயாரானான்.

சேவகர்களை அழைத்து, மந்திரியைத் தூக்கி நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் எறிந்த அரசன், கண்ட காட்சியில் உறைந்து போனான்.

அவன் நம்பிய அந்த கொடூர நாய்கள் எல்லாம் இப்போது அந்த மந்திரியின் முன்னால் வாலை ஆட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தன.

"இது எப்படி சாத்தியம்.?"

அதிர்ந்து நின்ற அரசன் கேட்டதும் புன்னகையுடன் மந்திரி கேட்டார்.

"அரசே... கடந்த பத்து நாட்களும் நான் இந்த நாய்களுடன் தான் இருந்தேன். நான் வெறும் பத்து நாட்கள் செய்த சேவையை மறக்காமல் இந்த நாய்கள் இவ்வளவு அன்பைச் செலுத்தும்போது, பத்து வருடங்கள் உங்களுக்கு செய்த சேவையை மறந்து ஒரு சிறு தவறுக்காக என்னைக் கொல்ல நினைக்கிறீர்களே... இது நியாயமா.?"

மந்திரி கேட்டதும் அரசனுக்குத் தன் தவறு புரிந்தது.

வருத்தத்துடன் தனது சேவகர்களைப் பார்த்துத் திரும்பிய அரசன்,
இந்த முறை மந்திரியை முதலைகள் 🐊🐊🐊🐊🐊 இருக்கும் குளத்தில் எறியச் சொன்னான்.

.

நீதி:

நிர்வாகம் உன்னைத் தூக்கணும்னு முடிவு பண்ணா...
அதுல  மாற்றமே இருக்காது 🤷‍♂

😂😂😆😂😂

கதை உங்களுக்கு புரியுதா???


Tuesday 21 November 2017

Whatsapp message

தெரிந்து மிதித்தாலும்........ தெரியாமல் மிதித்தாலும்....... மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.



நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை................
அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட ........................சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!




'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. ............
உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை...........




நோய் வரும் வரை உண்பவன்............உடல் நலமாகும் வரை....... உண்ணாதிருக்க வேண்டி வரும்!




பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ...............
ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..............!




பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?..
செலவு செய்யுங்க..........!

உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?..
கடன் கேளுங்க..............!





பிச்சை போடுவது கூட சுயநலமே............... புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...






அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...................ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.






வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.. ................
அதற்கு அவமானம் தெரியாது...............
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்.............!!






வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".

வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
 





திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்............................
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.................!!
 





முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்,....................
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.............
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
  





மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே...........................என்ற ஒரு காரணத்திற்காகவே...................... நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன..
  





நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
   





இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட.................... வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!






பகலில் தூக்கம் வந்தால்.................உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்.............!!
இரவு தூக்கம் வரலைனா..................... மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!





துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது.............
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..
  

  

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள.................... அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும்............................ எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது............


நட்புடன்
நான்.


Tuesday 14 November 2017

Whatsapp message

ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.

கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள்,
அழகான நதிகள்,
மரங்கள்,
எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று
அந்த அற்புத உலகம் மயக்கியது.
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.

ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு
அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன? அவரிடம் குருவி வழி கேட்டது.

“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,

அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி,
“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது. பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது. பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள். குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.
வந்து விட்டோம்.....
வந்தே விட்டோம்......
இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால்,
இதென்ன....
ஏன் என்னால் பறக்க முடியவில்லை.
ஐயோ,
என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே டியவில்லையே என்று கதறியது. மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.

குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.
“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
குடும்பத்துடன் வெளியே செல்வது,
பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,
பிடித்த புத்தகம் படிப்பது,
பிடித்த உடை உடுத்துவது,
பிடித்த உணவு உண்பது
என்று
எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.
ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்."
"இந்த நிமிடம் மட்டுமே இறைவன் நமக்கருளியது".

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
.