Saturday, 30 January 2021

Tamil kathai

ஒரு மகன் ஒரு முறை தன் தாயிடம் கேட்டான். எங்களை வளர்ப்பதற்காக அதிகமாக கஷ்டப்பட்டு தியாகம் செய்தது நீங்களா...? அல்லது அப்பாவா...?

அதற்குத் தாய் இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்டிருக்க கூடாது, குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் எவ்வித கஷ்டமும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். உங்க அப்பா என்னை திருமணம் செய்துகொண்டபோது சொந்த விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். நீ பிறந்த பின்னர் தன் விருப்பு வெறுப்புகளை மாற்றி உங்களுக்காக உங்கள் நலனுக்காக, உணவு, உடை, மருந்து மற்றும் உங்கள் கல்விக்கு என பல தேவைகளுக்காக சம்பாதித்தார். நீங்களும் நானும் இந்த குடும்பமும் உன் தந்தையின் வியர்வை உருவானவர்கள்.
,
மகன் இதே கேள்வியை தன் தந்தையிடம் கேட்டார்.

அவரின் பதில் வேறு மாதிரி இருந்தது. உங்கள் தாயார் எவ்வளவு தியாகம் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. உன்னை வளர்ப்பதற்காக அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. அவளுடைய பொறுமையும் விடாமுயற்சியும் தான் இந்த குடும்பத்தை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்தது. என்னுடைய வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்தாள். தனக்கு தேவையான எதையும் அவள் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. உங்களுக்காக தான் என்னுடன் சண்டையிட்டிருக்கிறாள். அவளது தியாகத்தை விட நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை என்றார்.

மகன் தனது சகோதரர்களிடம் சொன்னான். நம்மைவிட இந்த உலகில் அதிர்ஷ்டசாலிகள் யாரும் இருக்க முடியாது. தந்தையின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தாயும், தாயின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தந்தையும் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் சொர்க்கம்தான்.

பெற்றோர்கள் இருவர் அல்ல, ஒரு கிரீடத்தில் இருக்கும் இரண்டு வைரக்கற்கள். அவர்களை நம்முடனேயே வைத்து அவர்களது ஆயுட்காலம் முழுவதும் காப்போம்.

No comments:

Post a Comment