*மரணம் ;*
வா  மனிதா . .
நீ  கிளம்புவதற்கான 
நேரம் வந்து விட்டது.."
*மனிதன் ;* 
"இப்பவேவா? 
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள் 
என்ன ஆவது?"  
*மரணம் ;*
"மன்னித்துவிடு மனிதா . .
உன்னைக் கொண்டு 
செல்வதற்கான நேரம் இது.."
*மனிதன் ;*
நான்  
 இரவு , பகலாக  உழைத்து  சேர்த்த   எனது  பொருளாதாரம் . .
*மரணம் ;*
"நீ கூறியவை அனைத்தும் 
உன்னுடையது அல்ல.. 
அவைகள் பூமியில் 
நீ வாழ்வதற்கு ..
*மனிதன் ;* 
"என்னுடைய திறமைகள். .
*மரணம் ;*
"அவை உன் சூழ்நிலைகளுடன் 
சம்மந்தப்பட்டது..
*மனிதன் ;* 
"அப்படி என்றால் 
என் மனைவி,மக்கள்  மற்றும்   உற்றார்  உறவினர் . .
*மரணம் ;*
அவர்கள்   உன்   இதயத்துடன்  சம்பந்தப்பட்டவர்கள் . .
*மனிதன் ;*
எனது  உடல்?
*மரணம் ;*
"அது இந்த  மண்ணுக்கு
  சொந்தமானது 
*மனிதன் ;*
கண்களில்   நீர் வழிய 
"என்னுடையது என்று 
எதுவும் இல்லையா?" 
*மரணம்* ;
நீ வாழ்ந்த  
ஒவ்வொரு நொடி மட்டுமே 
உன்னுடையது.. 
நீ  செய்த  தர்மம் , பிறருக்கு  நன்மை  
செய்தது  , பிறர்  துண்பத்தில்   பங்கு  
கொண்டது  ,பிறருக்கு  தீங்கு  செய்யாமல்  இருந்தது ,   போன்ற  
போன்ற  நல்ல  செயல்கள் , 
மற்றும்  நீ  செய்த  பாவ  கருமங்கள்..
இவை  மட்டுமே  உன்னுடையது . .
மற்ற   எதையும்   இறுதிக் காலத்தில் 
நீ எதையும் உன்னுடன் 
கொண்டு போக முடியாது..
*வாழும்  காலம்  கொஞ்சமே...*
*மனிதா  நீ  மாறிவிடு ,உன்  மறு  உலகத்திற்காக...*
Sunday, 15 January 2017
Whatsapp message
Subscribe to:
Post Comments (Atom)
 
 
No comments:
Post a Comment