Sunday, 31 July 2016

Karkil war's reality


தேதி ஜூன் 2 1999.
.....
இடம் கார்கில் பிரதேசம்..கும்மாரி..டிராஸ் செக்டார்..
.....
நிகழ்ச்சி : இந்திய ராணுவ தளபதி ஜெனரல் திரு வி. பி. மாலிக் நடத்தும் சைனிக் தர்பார் கூட்டம்.
.....
பங்கு பெறுவோர் : செகண்ட் ராஜபுட்டானா ரைபிள்ஸ் சேர்ந்த வீரர்கள்.
.....
கூட்டத்தின் நோக்கம் :15000 அடி உயரத்தில் இருக்கும் பாகிஸ்தானியர் ஆக்கிரமித்துள்ள டோலோலிங் குன்றை மீட்பது..
....
பின்னணி : ஏற்கனவே இந்திய படை பலமுறை முயன்று முடியாமல் போனது..
.....
பாகிஸ்தானியர் உயரமான பாதுகாப்பான பங்கர்களில் இருந்து சுடுகின்றனர்..இந்திய படை மறைவிடமில்லாது திறந்த வெளியில் செங்குத்தான மலை மீது ஏறி மீட்க வேண்டும்..
....
இந்திய ராணுவத்தின் பல ரெஜிமெண்ட்டை சேர்ந்த 59 வீரர்கள் இந்த முயற்சியில் ஏற்கனவே இறந்து விட்டனர்..
....
என்ன திட்டம் கைவசம் இருக்கிறது என்று தளபதி சிம்மகுரலில் கூட்டத்தில் கர்ஜிக்கிறார்..
...
கூட்டத்தில் நிசப்தம்..
...
சில நிமிடங்களுக்கு பிறகு கூட்டத்தின் கடைசி வரிசையில் ஒருவர் மெதுவாக நிற்கிறார்..
....
தளபதி மீண்டும் கர்ஜிக்கும் குரலில் கோன் ஹை?
...
எழுநது நின்ற வீரர் தன பெயர் COMMANDO Digendra Kumar எனவும் தான் செகண்ட் ராஜபுட்டானா ரைபிளை சேர்ந்த கமாண்டோ வீரர் என்றும் கூறுகிறார்..
....
என்ன விஷயம் என தளபதி கேட்கிறார்..
...
தன்னிடம் அந்த டோலோலிங் குன்றை பிடிக்கும் திட்டம் இருப்பதாகவும் பொறுப்பை தன்னிடம் கொடுக்கும் படியும் விண்ணப்பிக்கிறார்..
...
எக்ஸ்பிளைன் என்று கர்ஜிக்கிறார் தளபதி..
...
அதற்கு திகேந்திர குமார் செங்குத்தான மலையை பாகிஸ்தானியர் எப்படி நமக்கு தெரியாமல் ஏறினார்களோ அதையே நானும் செய்வேன் என்று கூறி தன திட்டத்தை விவரிக்கிறார்..
...
ஜூன் 8 திகேந்திர குமாரும் அவருடன் 9 கமாண்டோக்கள் மட்டும் செயலில் இறங்குகின்றனர்..
...
இரவில் மட்டுமே (அந்த 10 பேர் மட்டுமே) மலையில் ஏறும் பணி துவங்குகிறது..பகல் வெளிச்சம் வந்தால் தங்கள் காமோப்லேஜ் (camouflage) உடையை நம்பி அசையாமல் கிடப்பது..பின்னர் இருள் கவிந்த பின்னர் சத்தமில்லாமல் மலையேறுவது என தொடர்கிறது அவர்கள் பணி..
....
ஒவ்வொரு வீரர் வசமும் 100 மீட்டர் உறுதியான கயிறு கருங்கல்லையும் எளிதாக துளைக்க கூடிய மலையேறும் கொக்கிகள்..AK 47 ரக துப்பாக்கி, 360 ரவுண்ட் குண்டுகள், 18 கையெறி குண்டுகள், ஒரு பிஸ்டல் முனையில் சயனைட் தோய்க்கப்பட்ட டாகர் (dagger) எனப்படும் கமேண்டோ கத்தி. உணவிற்காக கொஞ்சம் சாக்லேட் துண்டுகள்..(அவ்வளவு தான் தூக்கிக்கொண்டு செங்குத்தான மலையை ஏற முடியும்) இருந்தது..
...
மலை உச்சியில் இருந்ததோ 11 பங்கர்களில் பதுங்கியிருந்த 250 க்கும் அதிகமான பாகிஸ்தானிய வீரார்கள்..அவர்களிடம் ஏராளமான அதி நவீன ஆயுதங்கள்..
...
ஜூன் 12 நள்ளிரவு 10 பேரும் உச்சியை அடைகின்றனர்..இவர்கள் இருப்பதை கண்டுக்கொண்ட பாகிஸ்தானியரும் சுட ஆரம்பிகின்றனர்..சில பாகிஸ்தானியர் இருந்த பதுங்கு குழி பங்கர்களும் தகர்க்க படுகிறது..
...
பாகிஸ்தானியர்களின் பெரும் எண்ணிக்கை காரணமாகவும் ஏராளமான ஆயுதங்கள் காரணமாகவும் இந்திய கமாண்டோக்கள் ஒவ்வொருவராக இறக்கின்றனர்..
....
ஒவ்வொருவரும் உயிர் விடும் தருவாயில் தங்களிடம் எஞ்சி இருக்கும் ஆயுதங்களை Digendra Kumarரிடம் தருகின்றனர்..
..
11 பங்கரும் எரிகுண்டுகளால் தகர்க்கப்படுகிறது..
...
துப்பாக்கி குண்டு தீர்ந்த நிலையில் தன்னுடைய கமாண்டோ கத்தியினால் ஒருவரை குத்துகிறார்..(அவ்வாறு குத்தபடுகிறவர் பாகிஸ்தானிய ராணுவத்தின் மேஜர் அன்வர்கான் என பின்னர் தெரிய வருகிறது)
...
நடந்த சண்டையில் திகேந்திர குமார் நெஞ்சு பகுதியில் 3 குண்டுகளும் அடிவயிற்றில் ஒரு குண்டும் கை கட்டை விரலில் ஒரு குண்டும் பாய்கிறது.. மிகுதியான ரத்தம் இழந்த காரணத்தால் வெட்டவெளியில் நினைவு இழக்கிறார்.
.....
இதன் பின்னர் நடந்த சில நிகழ்சிகள்..
......
(1) கண் விழித்த போது திகேந்திர குமார் ஆர்மி ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்தார்..
....
(2) இந்த கமாண்டோக்கள் தொங்க விட்ட கயிறுகளின் துணையால் மலையுச்சிக்கு எளிதாக பல இந்திய வீர்கள் ஏறிட முடிந்தது..டோலோலிங் மலையுச்சியை மீட்டு இந்திய கொடி ஏற்றப்பட்ட விஷயம் ஆஸ்பத்திரி படுக்கையில் திகேந்திர குமாருக்கு தெரிவிக்கப்பட்டது.
......
(3) இவருடைய காயங்கள் காரணமாக இவர் இந்திய ராணுவத்தில் மேற்கொண்டு பணியில் இருக்கும் தகுதியை இழக்கிறார்..ராணுவ பணியில் ஊனமுற்றவராக பணி ஓய்வு தரப்படுகிறது.
......
(4) இவரது வீரத்தை பாராட்டி திகேந்திர குமாருக்கு ஜனவரி 26 அன்று மிக உயரிய விருதான மகா வீர்சக்ரா குடியரசு தலைவரால் வழங்கப்படுகிறது..
...
அநேகமாக கார்கில் யுத்தத்தில் மகா வீர் சக்ராவை உயிருடன் வாங்கியவர் இவர் மட்டுமே ஆகும்..
கார்கில் போரில் வெற்றியடைந்த விஷயத்தை நினைவு கூறும் விதமாக ஜூலை 26 ஆம் தேதியை விஜய் திவஸ் (வெற்றி திரு நாள்) என்று ராணுவத்தினராலும் ராணுவத்தினர் குடும்பத்தினராலும் கொண்டாடப்படுகிறது


No comments:

Post a Comment