Wednesday, 25 May 2016

IRDAI new rules

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு கட்டாய மாக க்ளெய்ம் வழங்க வேண்டும் என இந்திய இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) அறிவித்துள்ளது. 

இன்ஷூரன்ஸ் திருத்தச் சட்டம் 2015- பிரிவு 45-ன் கீழ் இந்த சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தத்தில்  கடந்த மார்ச் 20 அன்று இந்திய  குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு இருக்கிறார். கடந்த 2014, டிசம்பர் 26 முதல் இந்த திருத்தம் அமலுக்கு வருவ தாக இந்திய அரசு இதழில் (The Gazette of India) தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
ஐஆர்டிஏ-வின் இந்தத்  திருத்தம் என்ன சொல்கிறது என்பதை முதலில் விளக்கினார் ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் இன்ஷூரன்ஸ் நிபுணர் எஸ்.ஶ்ரீதரன்.

இன்ஷூரன்ஸில் ஐந்து வகையான பாலிசிகள் இருக்கின்றன. அவை, 1. டேர்ம் இன்ஷூரன்ஸ், 2. மணி பேக் பாலிசி, 3. எண்டோவ்மென்ட் பாலிசி, 4. ஹோல்லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி, 5. யூனிட் லிங்க்ட் பாலிசி.
ஒருவர் மேற்கூறிய பாலிசிகளில் எந்த வகையான லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியையாவது எடுத்து மூன்று வருடங்களுக்கு பிரீமியத் தொகையைச் செலுத்திவிட்டு, அவருக்கு ஏற்பட்ட விபத்துகளுக்கு க்ளெய்ம் கோரினால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் மறுக்காமல் க்ளெய்ம் தரவேண்டும். இதில் எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் விலக்கு கிடையாது என ஐஆர்டிஏ சொல்லி இருக்கிறது. புதிதாக வந்திருக்கும் மாற்றங்களை இனி பார்ப்போம். 

‬: என்னென்ன மாற்றம்?  

1. பாலிசியை எடுத்து முதல் மூன்று ஆண்டுகளில் பாலிசிதாரர் க்ளெய்ம் கோரி, எந்த நடவடிக்கையும் எடுக்காமல்  இருந்தால், மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்ட ஒரே காரணத்துக்காக   கட்டாயம் க்ளெய்ம் வழங்க வேண்டும்.

2. பாலிசிதாரர் பாலிசி எடுத்த நாளிலிருந்து (பிரீமியம் செலுத்திய நாள் அல்ல, இன்ஷூரன்ஸ் சான்றிதழ் வழங்கப்பட்ட தினத்திலிருந்து) 3 ஆண்டு களுக்குள் இறந்துவிட்டார். அவர் வங்கிக் கணக்கிலிருந்து பிரீமியத் தொகை இசிஎஸ் முறை மூலம் செலுத்தப் படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் குடும்பத்தினர் பாலிசி சான்றிதழை கண்டுபிடித்து க்ளெய்ம் கோரினாலும், க்ளெய்ம் தொகையை வழங்க வேண்டும். அதேபோல் பாலிசி தாரர், பாலிசி எடுத்து மூன்று ஆண்டு களுக்குள் இறந்துவிட்டார். பாலிசி தாரரின் குடும்பத்தினர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தாமதமாக தெரியப் படுத்தினாலும், இன்ஷூரன்ஸ் நிறுவனம் அந்தக் கோரிக்கையை நிராகரிக்காமல் க்ளெய்ம் வழங்க வேண்டும்.

3. பாலிசிதாரர் தன்னைப் பற்றிய தகவல்களை தவறாக வழங்கியது, நோய் பாதிப்பு, புகை, மதுப்பழக்கம் போன்ற வற்றைக் குறிப்பிடாமல் இருந்தது (Suppression of material fact, Misstatement, Non disclosure) போன்றவற்றை இன்ஷூரன்ஸ் நிறுவனம் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் கண்டுபிடித்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் க்ளெய்ம் தொகையை மறுக்க லாம். ஆனால், பாலிசிதாரர் செலுத்திய முழு பிரீமியத்தை பாலிசிதாரரிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும். 

4. இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் தொகையைப் பெற வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் பெயர் முதற்கொண்டு தனக்கு தெரிந்த தகவல்களை மறைத்து, திரித்து (Fraud) பாலிசி எடுத்திருக்கிறார் அல்லது இறந்தவரின் பெயரில் பாலிசி எடுப்பது போன்ற தவறுகளை பாலிசிதாரர் செய்திருக்கிறார் என்பதை முதல் மூன்று ஆண்டுகளுக்குள் கண்டுபிடித்தால்,   க்ளெய்ம் மற்றும் கட்டிய பிரீமியம் இரண்டையும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கத் தேவையில்லை.
இது ரிவைவல் (திரும்ப உயிர்பிக்கப்படும்) பாலிசிகளுக்கும் பொருந்தும். ஒரு பாலிசியை பாலிசிதாரர் ரிவைவல் காலத்தில் பிரீமியம் செலுத்தி மீண்டும் அதை தொடரும்பட்சத்தில், ரிவைவல் காலத்தில் பிரீமியம் தொகை செலுத்தப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப்பின் பாலிசிதாரர் கோரும் க்ளெய்ம்களை வழங்க வேண்டும்.

முதல்முறை லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மற்றும் ரிவைவல் பாலிசி களுக்கு ஹெல்த் டிக்ளரேஷன் இல்லாமல் பாலிசி வழங்கப் பட்டு இருந்தால், பாலிசிதாரர் முதல் மூன்று ஆண்டுகளில் கோரும் க்ளெய்மைகூட மறுக்கக்கூடாது.

6. யூலிப் பாலிசிகளில் பாலிசி எடுத்து முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பாலிசிதாரர் தவறான தகவல்களைத் தந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், பிரீமியத்தை திருப்பி தரவேண்டும். இதுவே யூலிப் பாலிசி ரிவைவல் காலத்தில் பிரீமியம் செலுத்தப்பட்டு இருந்தால், 3 ஆண்டுகளுக்குள் தவறான தகவல்கள் தந்தது கண்டுபிடிக்கப் பட்டால், பாலிசிதாரர் செலுத்திய மொத்த பிரீமியத் தொகை மற்றும் ஃபண்ட் வேல்யூவை (இறுதியாக பிரீமியம் செலுத்திய அன்று உள்ள மதிப்பு) முழுமையாக தரவேண்டும். 

இப்படி பல சட்டத் திருத்தங்களை ஐஆர்டிஏ புதிதாகக் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத் தினால் பாலிசிதாரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்’’ என்றார்


No comments:

Post a Comment