Friday, 7 June 2024

Psychology எந்த ஒரு துயரம் நேரும்போதும் நாம் ஐந்து நிலைகளைக் கடந்து வருகிறோம்

எந்த ஒரு துயரம் நேரும்போதும் நாம் ஐந்து நிலைகளைக் கடந்து வருகிறோம் என்பதை ஸ்விஸ் - அமெரிக்கன் மனநல மருத்துவர் எலிசபெத் கிப்ளர் ரோஸ் (Elizabeth Kubler-Ross) 1969ல் எழுதிய On Death and Dying நூலில் குறிப்பிட்டிருப்பார்.
1. Denial - மறுப்பு
“இல்லை. இது நடக்கவில்லை” என்று நம் மனம் சொல்லும்.
2. Anger - கோபம்
 
 நடந்துவிட்டது என்பதை மனம் உணர்ந்த அடுத்தநொடி கோபமாக மாறும். “ஏன் நடந்தது..”, “எனக்குப் போய் இது ஏன் நடந்தது”, “இதற்கு இதெல்லாம்தான் காரணம்” என்று சண்டை போடுவோம். எல்லார் மீதும் எரிந்து விழுவோம்.
 
3. Bargaining - பேரம்
 
அந்தத் துயரத்தைப் பேரம் பேசி கடக்க முயல்வோம். நெருங்கியவர்கள் இறப்பின்போது “கடவுளே…என் உசுர நீ எடுத்திருக்ககூடாதா?” என்பது, காதல் தோல்வியின்போது “சரி.. அட்லீஸ்ட் ஃப்ரெண்ட்சா தொடரலாமே..”, தேர்தல் தோல்வியின்போது “சின்னப்பையன், அவனை ஜெயிக்க வெச்சிருக்கலாமே…” என்பதெல்லாம் இந்தப் பேரம் எனும் நிலையில்தான் வருகிறது. 
 
4. Depression - மன அழுத்தம்
 
 இந்தக் கட்டத்தில் “அவ்ளோதான்.. எல்லாம் முடிஞ்சது”, “இனி என்ன இருக்கு” என்ற விட்டேத்தியான மனநிலையிலேயேதான் இருப்போம். யாருடனும் பேசப் பிடிக்காது. சோகத்திலேயே உழல்வோம். இந்தக் கட்டம்தான் இந்த ஐந்து நிலைகளிலும் கடக்க அதிக காலம் ஆகும் கட்டம். ஐந்தாவது நிலைக்குச் சென்றாலும் மீண்டும் சில சமயம் இந்த நான்காவது நிலைக்கு வருவோம்.
 
5. Acceptance - ஏற்றுக்கொள்ளுதல்
 
 மனம் அந்தத் துன்பியல் சம்பவத்தை ஏற்றுக்கொள்ளும். “இதுதான் வாழ்க்கை. நான் சரியாகிவிடுவேன்”, “இதைக் கடக்கும் மனத்திடம் எனக்கு உண்டு” என்று நம்மைச் சொல்லவைக்கும் நிலை இது. 

ஏற்கனவே சொன்னதுபோல இந்த நிலைக்கு வந்தபின்னும் அடிக்கடி நான்காவது நிலைக்கு நம் மனம் செல்லும். ஆனால் அப்படி நான்காவது நிலைக்குச் செல்லாமல் இந்த நிலையிலேயே வாழ்வைத் தொடர்வதைத்தான் ஜென் மனநிலை என்கிறார்கள். அதெல்லாம் ரொம்பவே பெரியவிஷயம்தான்!
 
காதல் தோல்வி, அன்பானவர்களின் மறைவு, வேலை பறிபோவது, நிராகரிப்பு என்று பலவற்றிலும் இந்த ஐந்து நிலைகள் மனிதவாழ்வில் வரும்.

#psychology

Sunday, 3 March 2024

Kathai

ஒரு ராட்சத கப்பலின் இயந்திரம் பழுதடைந்ததால், அதை யாராலும் சரிசெய்ய முடியவில்லை, எனவே அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரை பணிக்கு அமர்த்தினார்கள்.
இயந்திரத்தை மேலிருந்து கீழாக மிகக் கவனமாக ஆய்வு செய்தார் அவர். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, பொறியலீளர் தனது பையை இறக்கி ஒரு சிறிய சுத்தியலை வெளியே எடுத்தார். மெதுவாக எதையோ தட்டினார். விரைவில், இயந்திரம் மீண்டும் உயிர்ப்பித்தது. இயந்திரம் சரி செய்யப்பட்டது!

ஒரு வாரம் கழித்து பொறியாளர் கப்பல் உரிமையாளரிடம் ராட்சத கப்பலை பழுதுபார்த்ததற்கான மொத்த செலவு $20,000 என்று குறிப்பிட்டார்.

"என்ன?!" என்று ஆச்சரியமாக உரிமையாளர் கேட்டார்.

"நீங்கள் ஏறக்குறைய எதுவும் செய்யவில்லை. எங்களுக்கு ஒரு விரிவான பில் கொடுங்கள்."

பதில் எளிது....
சுத்தியலால் தட்டுவதற்கு: $2

எங்கு தட்ட வேண்டும், எவ்வளவு தட்ட வேண்டும் என்பதை அறிந்து கொண்டு தட்டுவதற்கு : $19,998

ஒருவரின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைப் பாராட்டுவது முக்கியத்துவம் வாய்ந்தது...

ஏனெனில் அவை நீண்ட நெடிய போராட்டங்கள், சோதனைகள் மற்றும் கண்ணீரின் முடிவுகளால் பெறப்பட்டது.

நான் ஒரு வேலையை 30 நிமிடங்களில் செய்கிறேன் என்றால், அதை 30 நிமிடங்களில் எப்படி செய்வது என்று 20 வருடங்களாகக் கற்றுக்கொண்டேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் சம்பளம் பல ஆண்டுகளுக்கானது. சில நிமிடங்களுக்கு அல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
#வாசித்ததில்பிடித்தது