Friday, 1 November 2024

ஒரு தாய்... விலைமதிப்பற்றவள்தந்தை..... காலத்தால் மீண்டும் வழங்க இயலாத சொத்து.

என் அம்மா எப்போதும் எங்களிடம் கூறுவார்:
தந்தை வீட்டிற்கு வரும்போது சிரித்த முகத்துடன் எதிர் கொள்ளுங்கள், 
ஏனெனில் வெளி உலகம் உங்கள் தந்தையை வெறுப்பேற்றி  அலைகழிக்கச் செய்கிறது.
 தாய் தந்தை  வித்தியாசம்???
தாய் 9 மாதங்கள் 
தன் வயிற்றில் சுமக்கிறாள்...
வாழ்நாள் முழுவதும் தந்தை தன் தோளில் உங்களை சுமக்கிறார்.. (நீங்கள் உணரமாட்டீர்கள்)
அம்மா உங்களை  பசிக்காமல் பார்த்துக் கொள்கிறாள்...
நீங்கள் பட்டினி கிடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் தந்தை கற்பிக்கிறார்.. (உங்களுக்குப் புரிவதில்லை)
அம்மா உங்களை மார்பில் சுமக்கிறாள்.
அவரை நீங்கள் பார்க்க முடியும்..
தந்தை உங்களை தன் முதுகில் சுமந்து செல்கிறார்.. (அவரை நீங்கள் பார்க்க முடியாது)
தாயின் அன்பு, அது நீங்கள் பிறந்ததிலிருந்தே உங்களுக்குத் தெரியும்...
தந்தையின் அன்பு
அது நீங்கள் தந்தையாகும்போது தான் உங்களுக்குத் தெரியும்.. (பொறுமையுடன் இருங்கள்)
ஒரு தாய்... விலைமதிப்பற்றவள்
தந்தை..... 
காலத்தால்  மீண்டும்  வழங்க இயலாத சொத்து.

Friday, 25 October 2024

ஒரு வீட்டில் மனைவி தன் கணவன் தன்னை எவ்வளவு நேசிக்கிறான் என்று சோதனை செய்ய விரும்பினாள்!

ஒரு வீட்டில் மனைவி தன் கணவன் தன்னை எவ்வளவு நேசிக்கிறான் என்று சோதனை செய்ய விரும்பினாள்!

சரி என்ன செய்யலாம் என்று நினைத்தவள் ஒரு பேப்பர் பேனாவை எடுத்து " இனிமேல் நான் உங்களுடன் வாழ விரும்ப வில்லை ! நான் உங்களை விட்டு எங்கோ போகிறேன்! என்று எழுதி டேபிளில் அவன் கணவன் கண்ணில் தெரியுமாறு வைத்து விட்டு கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டாள்.

வெளியே போய் இருந்த கணவன் வீட்டுக்கு வந்தான்! மனைவி எங்கே என்று தேடினான்! அப்பொழுது டேபிளில் ஒரு கடிதம் இருக்க அதை படித்தான்!

உடனே அருகில் இருந்த பேனாவை எடுத்து கடிதத்தில் கீழே ஏதோ எழுதினான்!

பிறகு மொபைலில் ஒரு குத்துப்பாட்டு போட்டு மகிழ்ச்சியில் ஒரு குத்தாட்டம் போட்டான்!

கட்டிலில் கீழே ஒளிந்து இருந்த மனைவிக்கு கணவனின் உண்மை சொரூபம் தெரிந்து கோபம் வர ஆரம்பித்தது!

இப்பொழுது செல் போனை எடுத்து யாருக்கோ டயல் செய்தான்!

ஹலோ! டார்லிங் நான் தான் குமார் பேசுகிறேன்! நம் காதல் நிறைவேற போகிறது! தயாராக இரு இன்னும் பத்து நிமிடத்தில் அங்கு இருப்பேன் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

கோபத்தின் உட்சத்துக்கு சென்ற மனைவி வெளியே வந்தாள், அவன் வெளியே போய் இருந்தான்.

கோபத்தில் அழுகை வந்தது!

வீட்டுக்கு உள்ளே வந்தவள் சரி கணவன் என்னமோ எழுதி இருந்தான் அதை பார்க்கலாம் என்று கடிதத்தை படித்தாள்.

அவள் எழுதி இருந்ததற்கு கடைசியில் அவன் இப்படி எழுதி இருந்தான்!

" லூசு ! லூசு ! நீ கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருப்பது எனக்கு தெரியும்! நீ மட்டும் தான் விளையாடுவியா ! நானும் கொஞ்சம் விளையாடி பார்க்கலாம் என்று தான் இப்படி!

உனக்கு பிடிக்கும் என்று பிரியாணியும் தந்தூரி சிக்கன் வாங்க போறேன்!

தட்டை எடுத்து வை வந்தவுடன் சாப்பிடலாம்! என்று எழுதி இருந்தான்!

இப்ப மனைவிக்கு ஆனந்த கண்ணீர் அப்புறம் என்ன!

Friday, 13 September 2024

ஒரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.

ஒரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.

முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.

இப்படிதான் ஒருநாள்.

ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான்.

இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.

வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கணவனின் நன்பருக்கும் Phone செய்கிறாள். கணவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புலம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்

இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கணவனின் நண்பன் Car எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கணவனை அனைத்துக்கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறான். அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கணவன்.

மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். மனைவியின் உறவினர்கள் வருகின்றனர். அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு... என்கிறார்

மருத்துவர்...உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்...

அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவன் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக என்கிறான்.

தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.

காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.