Wednesday, 26 April 2017

பரம்பரை

கனவன் +மனைவி
- முதல் தலைமுறை,

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,

பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,

சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,

பரன் + பரை -
ஏழாம் தலைமுறை,

பரன் + பரை = *பரம்பரை*

ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,

ஏழு தலைமுறை - 420வருடங்கள்..

ஈரேழு தலைமுறை - 840 வருடங்கள்..
(சுமார் 900 வருடங்கள்)ஆக,

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு
தலைமுறையாக
என்று பொருள் வரும்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..

இது தமிழ் மொழியின் தனிச் சிறப்பு!..


Whatsapp message

ஒரு குட்டி கதை.....

ஒரு ஊரில் பெரிய *கோயிலில் கோபுரத்தில்*
நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,

திடீரென்று *கோயிலில் திருப்பணி* நடந்தது

அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு
இடம் தேடி பறந்தன

வழியில் ஒரு *தேவாலயத்தை கண்டன*

அங்கும் சில புறாக்கள் இருந்தன

அவைகளோடு இந்த புறாக்களும்
குடியேறின.

சில நாட்கள் கழித்து *கிறிஸ்துமஸ்*
வந்தது.

தேவாலயம் புதுப்பிக்க தயாரானது

இப்போது இங்கு இருந்து சென்ற
பறவைகளும்
அங்கு இருந்த பறவைகளும்
வேறு இடம் தேடி பறந்தன .

வழியில் ஒரு *மசூதியை கண்டது*

அங்கும்
சில புறாக்கள் இருந்தன.
அவைகளோடு
இந்த புறாக்களும் குடியேறின

சில நாட்கள் கழித்து *ரமலான்*வந்தது
வழக்கம் போல்
இடம் தேடி பறந்தன.

இப்போது மூன்று இடத்திலும் உள்ள
புறாக்களும் கோயிலில் குடியேறின...

*கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை
ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.*

ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவிடம் கேட்டது
"ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?"
என்று...

அதற்கு அந்த தாய் புறா சொன்னது

"நாம்
இங்கு இருந்த போதும் புறா தான்,

தேவாலயத்துக்கு போனபோதும் புறா
தான்,

மசூதிக்கு போன போதும் புறா தான் ",



"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து"
சர்ச்க்கு போனால்
கிறிஸ்த்தவன்"
மசூதிக்கு போனால்"முஸ்லிம்" என்றது;



குழம்பிய குட்டி புறா"
*அது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும்* "என்றது.



அதற்கு தாய் புறா "

இது புரிந்ததனால்
தான் நாம் *மேலே இருக்கிறோம்,*
அவர்கள்  *கீழே இருக்கிறார்கள்"* என்றது..


Whatsapp message

திராட்சை பழம் கிலோ எவ்வளவு என்றேன்

60 ரூ. என்றான்

அதே கூடையில் உதிர்ந்த திராட்சை ரூ.30.என்றான்

அதற்கும் , இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன்

இரண்டும் ஒரே ரகம்தான் , இது உதிர்ந்தது - அது கொத்தாக இருக்கிறது
இரண்டும் ஒரே ருசிதான் என்றான்

யோசித்தேன்
சேர்ந்து இருப்பதால் தரமும் , விலை உயர்வாகவும் இருக்கிறது
பிரிந்து விட்டால் .........
இது போலத் தானே நட்பும் , உறவும் என்று மனதில் நினைத்தேன்

   #ப . ப .