Wednesday, 22 March 2017

Whatsapp message

ஒரு 👸🏻பொண்ணு டெய்லி காலெஜுலெர்ந்து வரும்போது ஒருத்தன்🕵
பின்னாடியே வரதக் கவனிச்சுச்சு ...

வீட்டுக்குள்ள போயி மூஞ்சி கழுவி ட்ரஸ்
மாத்திக்கிட்டு வந்து பாத்தா .🏘🏘
🕵அவன்
அங்கேயே நின்னுக்கிட்டு 📞📞செல்போன
நோண்டிக்கிட்டு இருக்கான்....
ஒருவாரம் ஆயிருச்சு.... தினமும்
அதே கதை தான்.....!!

பொண்ணு யோசிச்சது " அம்மாப்பாட்டச்
சொல்லிறலாமா?"
"இல்ல இன்னும் கொஞ்சம் பொறுத்துப்
பாப்போம்..."
ஒரு மாசம் தாண்டிருச்சு... கதை ரிப்பீட்டு...
ஒரு நண்பியக் கூட்டிக்கிட்டு வந்து அவனக்
காமிச்சுக் கதை சொல்லிச்சு அந்தப் பெண்...
பிரெண்டு " மூணு மாசம் வரைக்கும் பாரு...
பையன் நல்லா இருக்கான்.... வீட்டுல சொல்லிக்
கலியாணத்துக்கு ஏற்பாடு பண்ணிரலாம்"
ன்னு சொல்லிச்சு...

பெண்ணு மனசுக்குள்ள
ஒரு கிளுகிளுப்பு ஓட ஆரம்பிச்சிருச்சு....
நண்பியோடு கூடச் சேர்ந்து அவன் வேலை,
குடும்ப விபரம் எல்லாம்
கண்டு பிடிச்சு முடிச்ச போது ஒரு வருஷம்
தாண்டிருச்சு....
அப்பாம்மாட்டச் சொல்லிருச்சு.... அவங்களும்
கலியாணம் பேசி முடிச்சிரலான்னு
சொல்லி ஊர்லேர்ந்து பெரியவங்களக்
கூட்டிட்டு வந்து மொறைப் படி வரன் கேக்கப்
போக ரெடியானாங்க....

சந்தோசம் தாங்காமப் பொண்ணு அன்னைக்குச்
காலைல கோயில் போயிட்டு வரும்போது
அவன் கிட்டப் போயி
"ஒரு வருஷத்துக்கு மேலா என்ன
பாலோ பண்ணுறீங்க...
சின்சியரா வீட்டு முன்னாடி நின்னு பாக்குறீங்க....
ஆனாலும் ஒரு தப்புத் தண்டாவான
விஷயமெல்லாம் பண்ணலை.... அதுனால நான்
வீட்டுல சொல்லி, உங்க வீட்டுல சம்பந்த பேச
நாளைக்கு என்னோட அப்பாம்மா வராங்க... உங்க
வீட்டுல எந்தத் தடையும் சொல்ல
மாட்டாங்கன்னும் கண்டு பிடிச்சிட்டேன்.... ஐ
லவ் யூ டா கண்ணா" ன்னுச்சு...

அவன் அதுக்கு
"அடாடா... நான் உங்க
வீட்டுவாசல்ல உங்களுக்காகக்
காத்து நிக்கலை...உங்க வீட்டு WI-FI ல நீங்க
பாஸ் வேர்டு போடலை...
அதுனால
ப்ரீயா டவுன்லோடு பண்ணத்தான் வரேன்..."ன்னு
சொல்லிட்டு எடுத்தான் பாருங்க ஓட்டம்.....🏃🏻🏃🏻🏃🏻🏃🏻🏃🏻🏃🏻
😆😆😆😆😆


Whatsapp message

ஆண்கள் கவனத்திற்கு:
(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.)
ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான்.

சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு \"இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்\" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.

இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள்.

மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.
கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...
மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.

கணவன் : (அடிப்பாவி.. சண்டாளி..😳😳😠😡) 

மகிழ்ச்சி 😂😂😂😂


Monday, 20 March 2017

முயற்சிகள் முக்கியம் தான். ஆனால் முயற்ச்சிகளை எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதை விட முக்கியம்!!

தொழிற்சாலை கட்டடம் ஒன்றில் பல கோடி மதிப்புள்ள ஒரு இயந்திரம் செயல்படவில்லை.
அதை சரி செய்ய பல வல்லுனர்களை அழைத்தார்கள்.. ஆனால் யாராலும் அந்த இயந்திரத்தை  செயல்ப் பட வைக்க முடியவில்லை.
கடைசியாக வயதான ஒருவரை அழைத்தனர். அவர் சிறு வயதிலிருந்தே இயந்திரங்களை கையாழ்வதில் தேர்ச்சிப் பெற்றவர். மிகவும் அனுபவசாலி.
அவர் வரும்போதே ஒரு பெரிய மூட்டை நிறைய கருவிகளை கொண்டு வந்தார். வந்தடைந்த  அடுத்த கணமே  வேலையை ஆரம்பித்தார். அந்த இயந்திரத்தை கவனமாக பரிசோதித்தார்.
அந்த நிறுவனத்தின் இரண்டு உரிமையாளர்களுமே இவரை ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தனர். இதை எப்படியாவது சரி செய்து விடுவார் என்று நம்பிக்கையோடு இருந்தனர். 
அந்த முதியவர் ஆழ்ந்த பரிசோதனைக்கு பிறகு, அவர் வைத்திருந்த மூட்டையிலிருந்து ஒரு சின்ன சுத்தியை எடுத்தார். இயந்திரத்தை லேசாக தட்டினார். சடாரென்று இயந்திரம் உயிர் பெற்றது. இந்த சம்பவத்தை கண்ட அனைவரும் ஆனந்தத்தில் கத்தி ஆரவாரமாக கொண்டாடினர். அந்த வயதானவர் சத்தமில்லாமல் அந்த சுத்தியை மூட்டைக்குள்  மற்ற கருவிகளுடன் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
ஒரு வாரம் கழித்து அந்த உரிமையாளர்களுக்கு, பெரியவரிடமிருந்து 1 லட்சம்   ரூபாய்க்கான பில் வந்தது. அதை கண்டு வியந்து விட்டனர். 'அந்த கிழவன் ஒன்றுமே செய்ய வில்லையே..! ஏன் விலை இவ்வளவு உயர்வாக போட்டிருக்கிறார்..' என்று அந்த பெரியவருக்கு விளக்கம் கேட்டு 'நீங்கள் என்ன செய்தீர்கள் என்று 1 லட்சம் போட்டிருக்கிறீர்கள்.. மசோதாவை விரிவு படுத்தி அனுப்பவும்..' என்று ஒரு மடல் அனுப்பினர்.
பெரியவர் அவர்கள் கேட்டது போல் மசோதாவை விரிவு படுத்தி அனுப்பினார் :
'சுத்தியை வைத்து தட்டினதற்கு : Rs 2/-...
எந்த இடத்தில் தட்ட வேண்டும் என்று தெரிந்ததற்கு : Rs 99,998 /-..'
கதை நீதி : முயற்சிகள் முக்கியம் தான். ஆனால் முயற்ச்சிகளை எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதை விட முக்கியம்!!