தொழிற்சாலை கட்டடம் ஒன்றில் பல கோடி மதிப்புள்ள ஒரு இயந்திரம் செயல்படவில்லை.
அதை சரி செய்ய பல வல்லுனர்களை அழைத்தார்கள்.. ஆனால் யாராலும் அந்த இயந்திரத்தை செயல்ப் பட வைக்க முடியவில்லை.
கடைசியாக வயதான ஒருவரை அழைத்தனர். அவர் சிறு வயதிலிருந்தே இயந்திரங்களை கையாழ்வதில் தேர்ச்சிப் பெற்றவர். மிகவும் அனுபவசாலி.
அவர் வரும்போதே ஒரு பெரிய மூட்டை நிறைய கருவிகளை கொண்டு வந்தார். வந்தடைந்த அடுத்த கணமே வேலையை ஆரம்பித்தார். அந்த இயந்திரத்தை கவனமாக பரிசோதித்தார்.
அந்த நிறுவனத்தின் இரண்டு உரிமையாளர்களுமே இவரை ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தனர். இதை எப்படியாவது சரி செய்து விடுவார் என்று நம்பிக்கையோடு இருந்தனர்.
அந்த முதியவர் ஆழ்ந்த பரிசோதனைக்கு பிறகு, அவர் வைத்திருந்த மூட்டையிலிருந்து ஒரு சின்ன சுத்தியை எடுத்தார். இயந்திரத்தை லேசாக தட்டினார். சடாரென்று இயந்திரம் உயிர் பெற்றது. இந்த சம்பவத்தை கண்ட அனைவரும் ஆனந்தத்தில் கத்தி ஆரவாரமாக கொண்டாடினர். அந்த வயதானவர் சத்தமில்லாமல் அந்த சுத்தியை மூட்டைக்குள் மற்ற கருவிகளுடன் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
ஒரு வாரம் கழித்து அந்த உரிமையாளர்களுக்கு, பெரியவரிடமிருந்து 1 லட்சம் ரூபாய்க்கான பில் வந்தது. அதை கண்டு வியந்து விட்டனர். 'அந்த கிழவன் ஒன்றுமே செய்ய வில்லையே..! ஏன் விலை இவ்வளவு உயர்வாக போட்டிருக்கிறார்..' என்று அந்த பெரியவருக்கு விளக்கம் கேட்டு 'நீங்கள் என்ன செய்தீர்கள் என்று 1 லட்சம் போட்டிருக்கிறீர்கள்.. மசோதாவை விரிவு படுத்தி அனுப்பவும்..' என்று ஒரு மடல் அனுப்பினர்.
பெரியவர் அவர்கள் கேட்டது போல் மசோதாவை விரிவு படுத்தி அனுப்பினார் :
'சுத்தியை வைத்து தட்டினதற்கு : Rs 2/-...
எந்த இடத்தில் தட்ட வேண்டும் என்று தெரிந்ததற்கு : Rs 99,998 /-..'
கதை நீதி : முயற்சிகள் முக்கியம் தான். ஆனால் முயற்ச்சிகளை எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதை விட முக்கியம்!!
Monday, 20 March 2017
முயற்சிகள் முக்கியம் தான். ஆனால் முயற்ச்சிகளை எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதை விட முக்கியம்!!
வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே .. என்ற கவலைக்கு மத்தியில் வெளிநாட்டு வாழ்க்கை சாதனையே .. என்று சொல்லும் கவிதை இது.🙏🏼
✈
தெரியாத ஊர் ,
அறியாத மொழி ,
புதிதான சூழல்,
புரியாத சுற்றம்
அனைத்தும் தாண்டி நாம் அன்றாடம் வாழ்ந்து
கொண்டு இருக்கிறோமே..
நாம் வாழ
தகுதியானவர்கள்
மட்டும் அல்ல பிறருக்கு
வாழ்கையை கற்று
கொடுக்கவும்
தகுதியானவர்கள்.👌🏽👌🏽
இங்கே நாம் முடிந்தால்
சாப்பிடுவோமே தவிர
மூன்று வேளையும்
சாப்பிடுவதில்லை,
முடி வெட்டினால் கூட ஒட்ட
வெட்டுவோமே தவிர
ஒரு போதும் விட்டு
வெட்டியது கிடையாது,
இது எங்களின்
கஞ்சத்தனம்அல்ல,
நாங்கள் அசிங்கமானாலும்
எங்கள் குடும்பம் அழகாக
இருக்க வேண்டுமே என்ற
அபூர்வ குணமே.👌🏽👌🏽
எங்களின் ஒழுகிய
குடிசைகள் ஓடானது
கிழிந்த உடைகள் சீரானது
எங்களின் அக்காவுக்கும்
தங்கைக்கும் கல்யாண
பத்திரிக்கையையே இந்த
டாலர் / திர்ஹம்ஸ் / ரியால்
அனுப்பியதும் தானே
அச்சானது...👍🏽👍🏽
இங்கே சாதி மதம்
தடுக்காது முருகன்,
முகமதுவை மச்சான்
என்று கூப்பிடுகிறார்.
இங்கே கலவரம்
கிடையாது கர்நாடக காரர்
கூட என்னோடு தண்ணீர்
வேணுமா என்று
கேட்கிறார்.
இங்கே பயங்கரவாதம்
கிடையாது .பக்கத்து
அறையில் உள்ள பாகிஸ்தான் நபர்
என்னோடு நண்பனாக
பழகுகிறார்.
இதன் மூலம் நாங்கள்
உள்ளூர் ஒற்றுமையை
மட்டும் அல்ல, உலக
ஒற்றுமையையும்
காக்கிறோம் என்று உரக்க
சொல்லிகொள்கிறேன்.👍🏽
வீட்டில் விஷேசமோ,
நாட்டில் பண்டிகையோ,
உற்சாகத்தை
அடக்கினோம்,
வீட்டில் கெட்டதோ,
வீதியில் நல்லதோ,
உணர்வுகளை
அடக்கினோம்.
ஆங்காங்கே
பிலிப்பைன்ஸ் அழகிகள்
எங்கள் முன்னால்
அலைகின்ற போதும்
எங்கள் ஆண்மையை
அடக்கினோம்,
எத்தனையோ
அப்பாக்களை தங்கள்
குழந்தைகள் அங்கிள்
என்று அழைக்கின்ற போது
வந்த அழுகையை
அடக்கினோம்,
ஆக ஆசிரமங்களில்
எல்லாம் சாமியார்கள்
அக்கிரமங்களை
அரங்கேற்றும் போது, ஐம்
புலன்களையும் அடக்கி
ஆள்வது அயல் நாட்டில்
வாழும் நாங்கள் மட்டும்
தானே...👍🏽👍🏽
என் பெயர் ஆரோக்கியம்
என்றாலும் நான்
ஆரோக்கியமாக இருந்தால்
தான் இங்கு விசா
அடிப்பார்கள்.
என் பெயர் நல்லவன்
என்றாலும் என் மீது
வழக்கு இல்லை என்றால்
தான் என்னை வழி
அனுப்பியே வைப்பார்கள்.
ஆக நாங்கள் திடம்
வாய்ந்தவர்கள் மட்டும்
அல்ல உலகில் எங்கும்
வாழ தரம்
வாய்ந்தவர்களும் கூட👍🏽
அழுது முடித்து ,
அனுப்பிய சேலை உடுத்தி
என் மனைவி ஊரில்
நடந்தால் பகட்டாக
திரிகிறாள் என்கிறான்
பங்காளி வீட்டுக்காரன்..😢
ரொட்டி தின்று
கொடுத்து விட்ட பணம் குடி
இருக்க ஒரு குட்டி வீடு
வாங்கினால் வெளிநாட்டு
பணம் விளையாடுதோ
என்கிறான் என் எதிர்
வீட்டுக்காரன்.😢😢
இப்படி பொழுது போகாத
பொறாமை காரர்கள்
மத்தியில் பழுது படாமல்
இருப்பதால் பொறுமைக்கு
எடுத்து காட்டாய் இந்த
பொக்கிசங்களை
சொல்லலாமே ,....👍🏽👍🏽
பூவையர்க்கு பிரசவம்
வலியை தந்தது
பொறுத்து கொண்டோம்
ஏனென்றால்
அது தானே நமக்கு
வாரிசையும் தந்தது,👍🏽👍🏽
அது போலே வெளிநாட்டு
வாழ்க்கை
சில பிரிவை தந்தாலும்
பொறுத்து கொள்வோம்
ஏனென்றால்
அது தானே நமக்கு
பிழைப்பையும் ,👍🏽
கவுரவத்தையும்👌🏽
தந்திருக்கிறது ....💐
நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம். எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.
யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்!!!
விஞ்ஞானி ஒருவர்,
தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது.
கடை ஏதும் இல்லை. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்.
அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்கக் போகும் போது. கால் இடறி கீழே விழுந்தார். கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது.
இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான். அந்த வழிப்போக்கன், இவரைப் பார்த்து ஐயா என்ன ஆச்சு என்றான். இவரோ, இவனிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது?’ என்று எண்ணியபடி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம் என்றார்.
அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான். அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.
‘இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்க சொல்லலாம்’ என்று எண்ணி அவனிடம், ‘நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்துத் தாருங்கள்’- என்றார் விஞ்ஞானி.
‘ஒ! இது தான் உங்கள் பிரச்சனையா? நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை. ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது. மூன்று சக்கரங்களில் இருந்தும் தலா ஒரு போல்ட்களை கழட்டி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியை தயார் செய்து கொள்ளுங்கள், பிற்பாடு அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு ஓட்டிச் சென்று 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்’- என்று சொன்னார் வழிப்போக்கர்.
‘நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும், எனக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே! இவரைப் போய் குறைத்து எடை போட்டு விட்டோமே!’ என்று தனக்குள் கூறிக் கொண்டு தலை குனிந்தார் விஞ்ஞானி.
நீதி: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது,
ஆம்நண்பர்களே,
உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;
உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு;
ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம். அதே ஒரு தீக்குச்சியினால், பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.