👌�👌�👌�👍�👏�👍�👌�👌�👌�
*சிற்றின்பமும் - பேரின்பமும்*
~~~~~~~~~~~~~~~~~~
படைப்பினால் ஈர்க்கப் பட்டால் *சிற்றின்பம்.*
படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் *பேரின்பம்.*
படைப்புகளை அனுபவித்தால் *சிற்றின்பம்.*
படைப்புகளை ஆராதித்தால் *பேரின்பம்.*
படைப்புகளை படைப்புகளாய் கண்டால் *சிற்றின்பம்.*
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் *பேரின்பம்.*
என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் *சிற்றின்பம்.*
இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் *பேரின்பம்.*
நான் இந்த உடல் என எண்ணினால் *சிற்றின்பம்.*
நான் இந்த உயிர் என எண்ணினால் *பேரின்பம்.*
அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் *சிற்றின்பம்.*
அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் *பேரின்பம்.*
செய்வதெல்லாம் தனக்காக என்றால் *சிற்றின்பம்.*
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் *பேரின்பம்.*
செய்வது நான் என எண்ணினால் *சிற்றின்பம்.*
செய்வது இறைவன் என எண்ணினால் *பேரின்பம்.*
புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது *சிற்றின்பம்.*
அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது *பேரின்பம்.*
இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது *சிற்றின்பம்.*
வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது *பேரின்பம்.*
நிரந்தர "பேரின்பத்தை" மறைப்பது *சிற்றின்பம்.*
நிலையற்ற "சிற்றின்பத்திற்கு" அப்பாற்பட்டது *பேரின்பம்.*
உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது *சிற்றின்பம்.*
உயிரோடு மனதை இணைப்பது *பேரின்பம்.*
இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே *சிற்றின்பம்.*
துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது *பேரின்பம்.*
எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் *சிற்றின்பம்.*
எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் *பேரின்பம்.*
பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது *சிற்றின்பம்.*
மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது *பேரின்பம்.*
பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது *சிற்றின்பம்.*
பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது *பேரின்பம்.*
சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது *சிற்றின்பம்.*
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது *பேரின்பம்.*
பிறரை தனக்காக பயன்படுத்துவது *சிற்றின்பம்.*
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது *பேரின்பம்.*
அளவுடையது, முடிவுடையது *சிற்றின்பம்.*
அளவற்றது, முடிவிலாதது *பேரின்பம்.*
அறிவை மழுங்கடிப்பது *சிற்றின்பம்.*
அறிவைப் பிரகாசிக்கச் செய்வது *பேரின்பம்.*
அழகை மட்டும் ஆராதித்தால் *சிற்றின்பம்.*
அழகற்றதும் அழகும் ஒன்றானால் *பேரின்பம்.*
பயன் கருதி செயல் புரிந்தால் *சிற்றின்பம்.*
பயன் கருதாது செயல் புரிந்தால் *பேரின்பம்.*
முதலில் இனித்து பின் கசப்பது *சிற்றின்பம்.*
முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது *பேரின்பம்.*
இரக்கமற்றது, ஒழுக்கமற்றது *சிற்றின்பம்.*
கருணையுடையது, தர்மமானது *பேரின்பம்.*
உடலாய் அனைத்தையும் கண்டால் *சிற்றின்பம்.*
உயிராய் அனைத்தையும் கண்டால் *பேரின்பம்.*
புலன்களில் இன்பம் துய்ப்பது *சிற்றின்பம்.*
புலன்களுக்கு அப்பால் சென்றால் *பேரின்பம்.*
மனம் உலகில் அலைந்தால் *சிற்றின்பம்.*
மனம் இறைவனில் ஒடுங்கினால் *பேரின்பம்.*
மரண பயம் ஏற்படுத்துவது *சிற்றின்பம்.*
மரணத்தையும் வெல்வது *பேரின்பம்.*
மனமாய் இருந்தால் *சிற்றின்பம்.*
மனதைக் கடந்தால் *பேரின்பம்.*
வேறு வேறாய்க் கண்டால் *சிற்றின்பம்.*
எல்லாம் ஒன்றெனக் கண்டால் *பேரின்பம்.*
பகுதியாய்க் கண்டால் *சிற்றின்பம்.*
மொத்தமாய் கண்டால் *பேரின்பம்.*
அகங்காரம் கொண்டால் *சிற்றின்பம்.*
அகங்காரம் துறந்தால் *பேரின்பம்.*
தசையில் சுகம் பெறுவது *சிற்றின்பம்.*
அன்பில் தன்னை இழப்பது *பேரின்பம்.*
ஆண் பெண்ணில் இன்புறுவது *சிற்றின்பம்.*
ஆண் பெண்ணை வணங்குவது *பேரின்பம்.*
துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது *சிற்றின்பம்.*
துய்த்து விட்டால் நீங்காதது *பேரின்பம்.*
ஜீவராசிகளால் தரமுடிந்தது *சிற்றின்பம்.*
இறைவனால் தரப்படுவது *பேரின்பம்.*
உலகைப் பற்றினால் *சிற்றின்பம்.*
இறைவனைப் பற்றினால் *பேரின்பம்.*
பிறர் நலனைக் காணாதது *சிற்றின்பம்.*
தன் நலம் கொள்ளாதது *பேரின்பம்.*
இன்பம் இல்லாத இன்பம் *சிற்றின்பம்.*
இன்பமான இன்பமே *பேரின்பம்.*
அஞ்ஞானம் விரும்புவது *சிற்றின்பம்.*
ஞானம் விரும்புவது *பேரின்பம்.*
பெற்று மகிழ்வது *சிற்றின்பம்.*
கொடுத்து மகிழ்வது *பேரின்பம்.*
சக்தியை இழப்பது *சிற்றின்பம்.*
சக்தியாய் மாறுவது *பேரின்பம்.*
பற்றுக் கொள்வது *சிற்றின்பம்*
பற்றற்று இருப்பது *பேரின்பம்.*
மாறுவது, தாவுவது *சிற்றின்பம்.*
மாறாதது நிலைத்தது *பேரின்பம்.*
நிலையற்றது *சிற்றின்பம்.*
நிரந்தரமானது *பேரின்பம்.*
*சிற்றின்பம் பேரின்பம் இரண்டுக்குமே உச்சகட்டம் உண்டு*
👌�👌�👌�👍�👏�👍�👌�👌�👌
Tuesday, 14 March 2017
சிற்றின்பம் பேரின்பம் இரண்டுக்குமே உச்சகட்டம் உண்டு
Whatsapp message
ஒரு வீட்டில் எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.
எலி வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.
வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.
அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.
அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி திமிராகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."
உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.
மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.
அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.
ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம்.
எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.
எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.
அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.
அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.
உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.
சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.
இந்த முறை ஆட்டின் முறை.
விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.
பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.
எலி தப்பித்து விட்டது.
நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்.
ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.
Tuesday, 7 March 2017
உறவுகள் மேம்பட A to Z
**
மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்!
*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.
*B - Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
*C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.
*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.
*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.
*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.
*G - Genuineness*
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.
*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.
*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.
*K - Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.
*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.
*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.
*P - Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.
*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.
*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.
*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.
*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.
*W - Wound*
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.
*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.
*Z - Zero*
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.