Friday, 25 October 2024

ஒரு வீட்டில் மனைவி தன் கணவன் தன்னை எவ்வளவு நேசிக்கிறான் என்று சோதனை செய்ய விரும்பினாள்!

ஒரு வீட்டில் மனைவி தன் கணவன் தன்னை எவ்வளவு நேசிக்கிறான் என்று சோதனை செய்ய விரும்பினாள்!

சரி என்ன செய்யலாம் என்று நினைத்தவள் ஒரு பேப்பர் பேனாவை எடுத்து " இனிமேல் நான் உங்களுடன் வாழ விரும்ப வில்லை ! நான் உங்களை விட்டு எங்கோ போகிறேன்! என்று எழுதி டேபிளில் அவன் கணவன் கண்ணில் தெரியுமாறு வைத்து விட்டு கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டாள்.

வெளியே போய் இருந்த கணவன் வீட்டுக்கு வந்தான்! மனைவி எங்கே என்று தேடினான்! அப்பொழுது டேபிளில் ஒரு கடிதம் இருக்க அதை படித்தான்!

உடனே அருகில் இருந்த பேனாவை எடுத்து கடிதத்தில் கீழே ஏதோ எழுதினான்!

பிறகு மொபைலில் ஒரு குத்துப்பாட்டு போட்டு மகிழ்ச்சியில் ஒரு குத்தாட்டம் போட்டான்!

கட்டிலில் கீழே ஒளிந்து இருந்த மனைவிக்கு கணவனின் உண்மை சொரூபம் தெரிந்து கோபம் வர ஆரம்பித்தது!

இப்பொழுது செல் போனை எடுத்து யாருக்கோ டயல் செய்தான்!

ஹலோ! டார்லிங் நான் தான் குமார் பேசுகிறேன்! நம் காதல் நிறைவேற போகிறது! தயாராக இரு இன்னும் பத்து நிமிடத்தில் அங்கு இருப்பேன் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

கோபத்தின் உட்சத்துக்கு சென்ற மனைவி வெளியே வந்தாள், அவன் வெளியே போய் இருந்தான்.

கோபத்தில் அழுகை வந்தது!

வீட்டுக்கு உள்ளே வந்தவள் சரி கணவன் என்னமோ எழுதி இருந்தான் அதை பார்க்கலாம் என்று கடிதத்தை படித்தாள்.

அவள் எழுதி இருந்ததற்கு கடைசியில் அவன் இப்படி எழுதி இருந்தான்!

" லூசு ! லூசு ! நீ கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருப்பது எனக்கு தெரியும்! நீ மட்டும் தான் விளையாடுவியா ! நானும் கொஞ்சம் விளையாடி பார்க்கலாம் என்று தான் இப்படி!

உனக்கு பிடிக்கும் என்று பிரியாணியும் தந்தூரி சிக்கன் வாங்க போறேன்!

தட்டை எடுத்து வை வந்தவுடன் சாப்பிடலாம்! என்று எழுதி இருந்தான்!

இப்ப மனைவிக்கு ஆனந்த கண்ணீர் அப்புறம் என்ன!