Pages

Pages

Wednesday, 31 July 2019

மனிதர்கள் வழியாகச் செயல்படும் இறைவன்

*விடுதலைப் பயணம் 2: 1-15*

*மனிதர்கள் வழியாகச் செயல்படும் இறைவன்*

*நிகழ்வு*

ஒரு கிராமத்தில் கணவராலும் பின்னர் அவருடைய பிள்ளைகளாலும் கைவிடப்பட்ட மூதாட்டி ஒருத்தி இருந்தாள். பெரும்பாலான நேரங்களில் அவள், ‘எனக்கேன் இப்படியெல்லாம் நடக்கின்றது?’ என்ற அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். 

ஒருநாள் அவளுடைய வீட்டிற்கு அவளுடைய பால்ய காலத்துத் தோழி ஒருத்தி வந்தார். அவளிடம் அவள் தன்னுடைய நிலைமையை எடுத்துச் சொல்லி, “இப்போதெல்லாம் எனக்குக் கடவுள்மீது நம்பிக்கையே போய்விட்டது. அவர் மட்டும் இருந்திருந்தால், நான் ஏன் இவ்வளவு கஷ்டப்படவேண்டும்?” என்று புலம்பித் தள்ளினாள். உடனே அவளுடைய தோழி அவளிடம், “இனிமேலும் நீ இப்படியெல்லாம் அழுது புலம்பிக் கொண்டிராதே! கடவுளிடம் நீ உருக்கமாக மன்றாடு! அவர் உன்னைத் தொடவேண்டும் என்று மனம் உருகி வேண்டு. நிச்சயம் அவர் உன்னைத் தொடுவார்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அன்றைய நாளின் இரவு வேளையில் அந்த மூதாட்டி, முழந்தாள் படியிட்டு இறைவனிடம் மன்றாடத் தொடங்கினாள்; “ஆண்டவரே! என்மேல் இறங்கிவாரும்! என்னைத் தொட்டு உம்முடைய வல்லமையால் என்னை நிரம்பும்!” என்று உருக்கமாக மன்றாடினாள். அவள் இவ்வாறு மன்றாடத் தொடங்கிய சிறிதுநேரத்தில் ஒரு கை அவளைத் தொட்டது. உடனே அவள் மகிழ்ச்சியில், “ஆண்டவர் என்னைத் தொட்டுவிட்டார்... ஆண்டவர் என்னைத் தொட்டுவிட்டார்” என்று துள்ளிக் குதிக்கத் தொடங்கினாள். இச்செய்தியை தன்னுடைய தோழியிடம் சொல்வதற்கு மறுநாள்வரை அவள் காத்திருந்தாள்.

மறுநாள் பிறந்தது. மூதாட்டி தன் தோழியின் வருகைக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய தோழி வந்ததும், அவளிடம், “நேற்று இரவு நீ சொன்னது போன்று நான் இறைவனிடம் வேண்டினேன். இறைவனும் என்னைத் தொட்டார்” என்றாள். அவளோடைய தோழியோ அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள். மூதாட்டி தொடர்ந்து பேசினாள்: “நேற்று இரவு நான் இறைவனிடம் வேண்டும்போது அவர் என்னைத் தொட்டார் என்று சொன்னேன் அல்லவா... அவர் என்னைத் தொடும்போது நீ என்னைத் தொடுவதுபோன்று அவ்வளவு வாஞ்சையாக இருந்தது.”

  அந்த மூதாட்டி இவ்வாறு சொல்லிமுடித்ததும், அவளுடைய தோழி அவளிடம், “உண்மையில் நடந்ததுதான் இதுதான். நேற்று இரவு நீ இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கும்போது உன்னைத் தொட்டது வேறு யாரு நான்தான்” என்றாள். “நான்தான்” என்று அவளுடைய தோழி சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போன அந்த மூதாட்டியிடம், அவளுடைய தோழி, “பின்னே! இறைவன் உன்னைத் தொடுவார் என்றால், வானத்திலிருந்து தன் கைகளை நீட்டியா தொடுவார்? யாருடைய கை பக்கத்தில் இருக்கின்றதோ, அந்தக் கையின் வழியாகத் தொடுவார்” என்றார். இதற்குப் பிறகு அந்த மூதாட்டி, கடவுள் தன்னை விட்டு விலகவில்லை... அவர் தன்னோடுதான் இருக்கின்றார்’ என்ற உண்மையை உணர்ந்துகொள்ளத் தொடங்குகின்றாள். 

கடவுள் தன் மக்களைக் கைவிட்டு விடுவதில்லை. அவர் மனிதர்கள் வழியாகச் செயல்பட்டு அவர்களை மீட்கின்றார் என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் எபிரேயர்கள் பார்வோனின் ஆட்சியில் சொல்லொண்ணா துயரை அனுபவித்தபோது, அவர்களை விடுவிக்க கடவுள் மோசேயை அவர்கள் மத்தியில் அனுப்புகின்றார். அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

*எபிரேயர்களின் ஆண் குழந்தைகள் கொல்லப்படுதலும் மோசே காப்பாற்றப்படுதலும்* 

பார்வோன் மன்னன் எபிரேயர்களின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், அவர்களை அழிக்க என்னவெல்லாமோ செய்து பார்த்தான். எதுவும் முடியாமல் போகவே, இறுதியில் அவர்களின் ஆண் குழந்தைகளை நைல் நதியில் தூக்கிப் போடச் சொன்னான். இப்படி எல்லா எபிரேயக் குழந்தைகள் நைல் நதியில் தூக்கிப்போடப்படும்போது அம்ராம் - யோக்கபேது (விப 6:20) தம்பதியரின் மகனான மோசே மட்டும் அதிலிருந்து அதிசயமாகக் காப்பாற்றப்படுகின்றார். காரணம் மோசே மற்ற குழந்தைகள் போன்று கிடையாது. அவர் வித்தியாசமானவர் (எபி 11: 23). அவர்க்கென்று ஒரு திட்டத்தை இறைவன் வைத்திருந்ததால் இறைவன் அவரை பார்வோனின் கையிலிருந்து காப்பாற்றுகின்றார்.

*இஸ்ரயேல் மக்களை விடுவிக்கப்பிறந்த மோசே எப்படிப்பட்டவர்*
எபிரேயர்களின் எல்லாக் குழந்தைகளும் நைல் நதியில் தூக்கி வீசப்பட்டபோது, மோசே மட்டும் அதிசயமாகக் காப்பாற்றப்பட்டார் என்று மேலே பார்த்தோம். இப்படி அதிசயமாகக் காப்பாற்றப்பட்ட மோசே எப்படிப்பட்டவர் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துச் சொல்கின்றது. மோசே வளர்ந்து பெரியவனானபின் தன் மக்களின் நிலையைக் காணச் சென்றபோது, தன் இனத்தானாகிய எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனை அடித்துக் கொள்கின்றார். 

இதைக் குறித்து விவிலிய அறிஞர்கள் சொல்லும்போது, மோசே தன் இனத்தவனை அந்த எகிப்தினை அடித்தான் என்பதற்காக அடிக்கவில்லை. மாறாக வறியவன் ஒருவனை வலிமையானவன் ஒருவன் அடித்தான் என்பதற்காக அடித்தார் என்று சொல்வார்கள். இதன்மூலம் மோசே மக்கள்மீது அதுவும் குறிப்பாக வறியவர்கள்மீது மிகுந்த இரக்கம் கொண்டவர் என்பதைப் புரிந்துகொள்ளலாம். எண்ணிக்கை நூலும் கூட, “பூவுலகில் உள்ள அனைத்து மாந்தரிலும் மோசே சந்தமுள்ள மாந்தராய்த் திகழ்ந்தார்” (எண் 12: 3) என்றுதான் எடுத்துச் சொல்கின்றது. 

இவ்வாறு, கடவுள் தன் மக்களைக் கைவிட்டுவிடுவதில்லை. அவர்களை வழிநடத்த தன் தூதர்களை அனுப்புவார் என்பதை மோசேயின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். 

*சிந்தனை*

‘ஆண்டவரே! உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை’ (திபா 9:10). என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்மைக் கைவிடாமல், தன் தூதர்கள் வழியாக நம்மைக் காக்கும் இறைவனுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்போம். அதவழியாக 

No comments:

Post a Comment