Pages

Pages

Friday, 18 November 2022

எதை நோக்கி போகிறது இந்த உலகம்

எதை நோக்கி போகிறது இந்த உலகம் 
பிறரை மகிழ்வித்து அகமகிழ வேண்டியிடத்தில்
பிறரை அழவைத்து ரசிக்கிறார்கள்
அன்பாய் பேச வேண்டியடத்தில்
அதட்டி பேசுகிறார்கள்
தவறை ஒப்புக்கொண்டிடத்தில்
அதை எப்படிச் செய்யலாம் என்கிறார்கள்
கனிவும்  பண்பும் இருக்கவேண்டிடத்தில்
அதிகாரம் விளையாடுகிறது
காதலும் அன்பும் இருக்கவேண்டிடத்தில்
காமம் விளையாடுகிறது
பாசமும் நேசமும் 
இருக்கவேண்டிடத்தில் 
செல்வம் விளையடுகிறது
எதை நோக்கி போகிறது இந்த உலகம் ||

No comments:

Post a Comment