Pages

Pages

Friday, 20 November 2020

Real Life

100 கருப்பு எறும்புகளையும்
100 சிவப்பு எறும்புகளையும்
சேகரித்து.....
ஒரு கண்ணாடி ஜாடியில் வைத்து அமைதியாக விட்டால்
எதுவும் நடக்காது...ஒரு பிரச்சினையும் வராது.
ஆனால், நீங்கள் அந்த ஜாடியை எடுத்து பலமாக குலுக்கி, ஒரு மேஜையில் வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்....அடுத்தது என்ன நடக்கும்?
நீங்கள் குலுக்கிய வேகத்தில்,
ஒன்றும் புரியாத அந்த எறும்புகள்
ஒன்றுக்கொன்றுத் தாக்கி....
ஒன்று மற்றொன்றைக் கொல்லத் தொடங்கும்.
சிவப்பு கறுப்பை எதிரி என்றும்
கருப்பு சிவப்பை எதிரி என்றும் நம்பும்....
ஆனால் உண்மையில்....எதிரி
அந்த ஜாடியை அசைத்தவர்....யார் என அதற்கு தெரியாது...தெரியவும் வாய்ப்பில்லை.
அப்படி செய்தவர்...
ஹாயாக ஒரு நாற்காலியில்
உட்கார்ந்துக் கொண்டு 
அந்த ஜாடியை ஆனந்தமாகப்
பார்த்துக்கொண்டிருப்பார்.
இந்த சிக்கலான சமுதாயத்திலும் 
இதே நிலைதான்.
#சாதி_மத_அரசியல்_மதவெறியர்கள் குறிப்பாக #மதம்_சார்ந்த அரசியல்கட்சி & இயக்கங்கள் பதிவிடும் பகிரும் எதையும் நம்பிவிடாதீர்கள்.
எங்குப் பார்த்தாலும் வதந்திகள். வதந்திகள் மட்டும்தான்...
பற்ற வைக்க ஆளாளுக்கு அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த விஷயத்திலும் 
பொது புத்தியோடு அணுக வேண்டாம்.
நாம் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதற்கு முன், 
நம்மை நாமே 
ஒரு கேள்வியை 
கேட்டுக்கொள்ள வேண்டும்.
அந்த ஜாடியை உலுக்கியது யார்?
#உழைத்து வாழ இயலாதப் பலர் சமூகப் புரட்சி என்ற பெயரில் தன் சொந்த சமூகத்தையே ஏமாற்றும் ஆயிரக்கணக்கான நபர்கள் நம்மைச் சுற்றி உள்ளனர்.  கவனமாக இருங்கள் மக்களே.!
நன்றி..

No comments:

Post a Comment