Pages

Pages

Saturday, 29 June 2019

WhatsApp message

நறுக்கென்று ஒரு கேள்வியை இறைவனிடம் ஒருவன் கேட்டான்....

காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்.....,
காசுள்ள மனிதனுக்கு அருகிலும்
காட்சி அளிக்கிறாயே இறைவா......!

இது என்ன நியாயம்????

கலகலவென சிரித்தான் இறைவன்

தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன்
நீங்கள் வணங்கவில்லை;

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன்
நீங்கள் கேட்கவில்லை;

தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன்
நீங்கள் நம்பவில்லை;

ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன்
நீங்கள் செய்யவில்லை;

எனக்கான இடத்தை,

எனக்கான நேரத்தை,

எனக்கான விழாக்களை,

என்னை வணங்கும் முறையை,

எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!

இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து
என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு

என்னையே கேட்பது என்ன நியாயம் என்றான்????


No comments:

Post a Comment