காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் பெஞ்சில் ஏறி நில்லுங்கோ" என்று ஆசிரியர் சொல்ல, செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள்.
அதிலே ஒரு குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல நின்றது.
ஆசிரியர் அந்த குழந்தையை "இங்கே வாம்மா" என்று அழைத்தார்.
"வீட்டுப்பாடம் செய்தியா?"
"இல்ல சார், எனக்கு அது விளங்க இல்ல"
"வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே"
குழந்தை தயங்கியபடியே சொன்னது.
"எனக்கு அம்மா இல்ல"
ஆசிரியர் துணுக்குற்றுபோனார். அடடா அவசரப்பட்டு பெஞ்சில்ஏற்றிவிட்டோமோ என்று வருந்தினார்.
"அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமேகண்ணா"
"எனக்கு அப்பாவும் இல்லை சேர்"
குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கிவாரிப்போட்டது. அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல் இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்? ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று வருந்தினார்.
குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின் கண்கள் கலங்கிவிட்டது.
"கண்ணம்மா .. இங்க பாரு .. அம்மாவும் அப்பாவும் இல்லையா? .. பரவாயில்ல..நாங்க எல்லாம் இருக்கிறம் தானே .. கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?"
குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது...
"மம்மி டாடியோட..!!!"😳
ஆசிரியர்- 😳😳😯😯
😜😖🙅💆
வாழ்க தமிழ்..!!!
Pages
▼
Pages
▼
No comments:
Post a Comment