Pages

Pages

Saturday, 17 June 2017

குறைகள் என்பது குறைத்து கொள்ள மட்டுமே மனதில் போட்டு குழப்பிக் கொள்ள அல்ல.......

*இரு வேறு பார்வைகள்* !!

“வீட்டிலே காபி கொடுத்தாள்
மனைவி. உள்ளே ஓர் எறும்பு கிடந்தது.
அதைக் கண்ட கணவன் காபியை
விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான்.
விளைவு? சண்டை. சந்தோசமான
வீடு மூன்று நாள் துக்க வீடாக மாறிவிட்டது.

இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது.
அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். “உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான். உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார். இது போல் ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே.”மனைவி சிரித்தாள். தன் தவற்றை உணர்ந்தாள். அதன்பிறகு அவர்கள் வீட்டுக் காபியில் எறும்பு சாகவில்லை.அவர்கள் வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை.

குறைகள் என்பது குறைத்து கொள்ள மட்டுமே மனதில் போட்டு குழப்பிக் கொள்ள அல்ல.......🤔🤔😚


No comments:

Post a Comment